பாஜக மற்றும் திமுக விற்கு இடையே அடிதடி தகராறு! திமுக தோல்வி பயமே இதற்கு காரணம்!

Photo of author

By Rupa

பாஜக மற்றும் திமுக விற்கு இடையே அடிதடி தகராறு! திமுக தோல்வி பயமே இதற்கு காரணம்!

வரும் சட்டமன்ற தேர்தலானது ஏப்ரல் மாதம் 6 அம தேதி நடக்க இருக்கிறது.இந்நிலையில் தேர்தல் களமானது சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.ஒவ்வொரு கட்சிகளும் எதிரெதிர் கட்சிகளை பற்றி அவதூறாக பேசி மக்களிடம் வாக்குகளை  சேகரித்து வருகின்றனர்.இந்நிலையில் மக்களுக்கு லஞ்சமாகவும் அல்லது பரிசு பொருட்களாகவும் பலவிதத்தில் பணத்தை பட்டுவாடா செய்துவருகின்றனர்.

இருப்பினும் இந்த திமுக பிரச்சாரத்தை தொடங்கியதிலிருந்தே அதிக அட்டூழியங்களை செய்து வருகிறது.அந்தவகையில் கடைகளில் சாப்பிட்டுவிட்டு கடைகாரருக்கு காசு கொடுக்காமலும்,ஸ்டாலின் பிரச்சாரத்தில் ஈடுபடும் போது அவரை வரவேற்கிறோம் என்றுக் கூறி மாடியையே பட்டாசு வெடித்து தீ பற்றி எறிய வைத்தார்கள்.அப்போது போலீசார் உட்பட 6 பேருக்கு தீ காயம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அதனைத்தொடர்ந்து பறக்கும் படையினரிடம் சிக்கிய பணத்தை  மீண்டும் திமுக வேட்பாளருக்கே கொடுக்கும் படி பறக்கும்படையினரையே மிரட்டியுள்ளனர்.அந்தவகையில் கரூர் மாவட்டத்தில் பாஜக ஆதரவாளர் மீது திமுக வினர் சரமாரியாக தாக்கியுள்ளனர்.அவர்கள் தாக்கியதில் ஆதரவாளர் பலத்த காயம் ஏற்பட்டு கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.மேலும் அவரை பார்க்க வந்த பாஜக மாநில துணைத்தலைவர் அண்ணாமலை கூறியது,திமுக அதிக அளவு அராஜகம் செய்து வருகிறது.இதற்கு முற்றிலும் காரணம் செந்தில் பாலாஜி தான் என்றார்.அதுமட்டுமின்றி திமுக விற்கு தோல்வி பயம் வந்துவிட்டது.அதனால் தான் இவ்வாறு நடந்துக்கொள்கிறார்கள் என்று கூறினார்.