BJP NTK: பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சி சீமான் கடந்த சில மாதங்களாகவே இணக்கத்தில் இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் காட்டிக் கொள்கின்றனர். ஆனால் இது குறித்து சீமானிடம் கேள்வி எழுப்பினால் நாங்கள் தனியாகத்தான் செயல்படுவோம் என்று தெரிவித்து வருகிறார். அண்ணாமலை பாஜக மாநில தலைவராக இருந்தபோது ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அதே நிகழ்ச்சிக்கு வந்த சீமானிடம் கை கொடுத்து இதே போல் போராடுங்கள் விட்டு விடாதீர்கள் என கூறினார். இதனை அடுத்து கல்லூரி நிகழ்ச்சியிலும் சீமானை புகழறையில் மூழ்கடித்தார். அவருக்கேற்றார் போல் சீமானும் அண்ணாமலையே விடாது புகழில் மகுடம் சூடினார். இது மட்டும் போதாது தமிழக அரசு பாஜகவிற்கு எதிராக அனைத்து கட்சி பொதுக்கூட்டம் நடத்திய போது கூட கலந்து கொள்ள மாட்டேன் என கூறி மறுப்பு தெரிவித்துவிட்டார்.
இப்படி ஒன்றன்பின் ஒன்றாக சீமான் பாஜகவிற்கு சாதகமாக ஒவ்வொரு செயல்முறையும் அமைந்ததை அடுத்து இவர்கள் கூட்டணி வைக்கப் போவது உறுதியென கூறி வந்தனர். அதேபோல பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றதும், சீமானை எங்கள் கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறி அழைப்பு விடுத்திருந்தார். இவ்வாறு அவர் அழைப்பு விடுத்ததற்கு சீமான் இன்று பேட்டி அளித்துள்ளார்.
அதில் கூறியதாவது, தேசிய கட்சியில் கூட்டணி வைக்க எங்களை அழைத்த பாஜக மாநில தலைவருக்கு மிகுந்த நன்றி. எங்கள் அரசியல் பயணம் எங்களது கால்களை நம்பி தான் இருக்கிறது வேறொருவர் தோல்களை நம்பி கிடையாது. தேர்தல் அரசியல் கட்சி அரசியல் கூட்டணியை நம்பி தான் அரசியல் செய்வார்கள். நாங்கள் மக்களை வைத்து தான் அரசியல் செய்கிறோம் அதனால் எங்களுக்கு கூட்டணி தேவைப்படாது என தெரிவித்துள்ளார். இதன் மூலம் பாஜக வுடன் சீமான் கூட்டணி வைப்பது கிடையாது என்பது தெரியவந்துள்ளது.