பாஜக மற்றும் விசிக இடையே கைகலப்பு! சாதிய பிரச்சனைகளை கிளப்பும் திமுக!
கடந்த 14-ம் தேதி அம்பேத்கார் பிறந்த தினம் கொண்டாடப்பட்டது.அந்த வகையில் அரசியல் தலைவர்கள் பலர் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவர் சிலைக்கு மாலை அணிவித்து வந்தனர்.அந்த வகையில் மதுரையிலுள்ள அவுட்போஸ்டியில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு வி.சி.க தலைவர் திருமாவளவன் மாலை அணிவித்தார்.
அப்போது அங்கு அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க பாஜக தரப்பினரும் வந்தனர். அங்கு வந்த பாஜக தரப்பினரை விசிகவினர் மாலை போட விடாமல் தடுத்து மறைத்தனர்.இதனால் இரு தரப்பினருக்குமிடையே தகராறு ஏற்பட்டது.
அந்த தள்ளுமுள்ளு தகராறில் விசிக கட்சியினர் பாஜகவினரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.அதன்பின் தகராறில் ஈடுபட்ட விசிக நபர்கள் 50 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.அதேபோல் பாஜக தரப்பினர் 10 பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர்.இந்த தகராறு பற்றிய தகவல் பாஜக தலைமைக்கு தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து பாஜகவின் தமிழக தலைவர் எல்.முருகன் கூறியதாவது,அம்பேத்கார் பொதுவானவர்.அவர் சிலைக்கு மாலையிட நானே வருவேன்,என்னை யாரவது தடுத்து பாருங்கள் என சவால் விட்டார்.அதற்காக எல்.முருகன் மதுரை வந்தார்.அவர் சவாலுக்கினங்க மதுரை விசிகவினர் போராட்டம் நடத்தினர்.
அதனால் அவுட் போஸ்ட் சிலை உள்ள இடத்தில் போலீசாரால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.அதன்பின் எல்.முருகன் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார்.பின் செய்தியாளர்களை சந்தித்து எல்.முருகன் கூறியதாவது,திருமாவளவன் அவரது கட்சியை கட்டுப்படுத்த வேண்டும்.
எங்கள் பாஜக கட்சியை போல் வேறு யாராலும் அம்பேத்கருக்கு மரியாதை செலுத்த முடியாது.எங்கள் ஆட்சியில் தான் அவர் பிறந்தநாள் அன்று பொது விடுமுறை அளித்தோம்.அதுமட்டுமின்றி எங்கள் ஆட்சி இருக்கும் போது தான் பாரத ரத்னா விருதும் வழங்கப்பட்டது என்று அவர் பெருமையாக செய்தியாளர்களிடம் பேசினார்.
திட்டமிட்டு விசிகவினர் பாஜகவினரை தாக்கியுள்ளனர்.விசிகவில் தகராறில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.விசிகவினர் அரசியல் செல்வாக்கை இழந்துவிட்டனர்.அதனால் தான் விசிகவில் உள்ளவர்கள் பாஜகவில் வந்து இணைகின்றனர் என கூறினார்.
அரக்கோணத்தில் நடந்த சம்பவம் மிகுந்த துரதிஷ்டவசமானது.இதில் திமுகவும் விசிகவும் சாதிய பிரச்சனையாக மாற்ற முயல்கிறது.விசிகவை காவல் துறையினர் அதிகம் கண்காணிக்க வேண்டும் என்றார்.பாஜகவினர் அமைதியானவர்கள் அதனால்தான் பாஜக மீது தாக்குதல் செய்த போதும் அவர்கள் அமைதியை கடைபிடித்தனர்.மீண்டும் சொல்கிறேன் விசிக தனது கட்சியை கட்டுபடுத்த வேண்டும் என கூறினார்.