அண்ணாமலை போட்ட ட்வீட்! கலகலப்பான ட்விட்டர் வலைதளம்!

Photo of author

By Sakthi

கடந்த 12ஆம் தேதி தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் தொடங்கியது இந்த நிலையில்,19ஆம் தேதி காண நேற்று மாலை மூணு மணி வரை வேட்புமனுத்தாக்கல் நடைபெற்றது.
இந்த நிலையில், நேற்று மாலை சுமார் 3 மணியுடன் வேட்புமனுத்தாக்கல் முடிவுற்ற நிலையில், தமிழகத்தில் இதுவரையில் 1109 ஆண் வேட்பாளர்களும் 1055 பெண் வேட்ப்பாளர்களும் மற்றும் 3 மூன்றாம் பாலினத்தவர்கள் என்று மொத்தமாக 1167 வேட்பாளர்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்து இருக்கிறார்கள்.


இன்று காலை வேட்பு மனு மீதான பரிசீலனை தொடங்கியது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அதேபோல எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் போன்றோரின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.அதேபோல பல முக்கிய பிரமுகர்களின் வேட்பு மனுவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

தமிழகத்தைப் பொருத்தவரையில், அரவக்குறிச்சி சட்டசபை தொகுதியில் அதிமுகவைப் பொறுத்தவரையில் அந்த கட்சியின் சார்பாக அந்த கூட்டணியின் வேட்பாளர் பாஜகவை சேர்ந்த அண்ணாமலை நிறுத்தப்பட்டு இருக்கிறார். இந்த தொகுதியில் இதுவரையில் மொத்தமாக 47 வேட்பாளர்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்து இருந்தார்கள். இதில் பாஜகவின் மாநில துணைத் தலைவர் அண்ணாமலையின் வேட்புமனு தேர்தல் ஆணையத்தால் நிறுத்திவைக்கப்பட்டது.

அதற்கு காரணமாக, கூறப்படுவது அண்ணாமலை அவர் மீது போடப்பட்டு இருக்கின்ற பத்திற்கும் மேற்பட்ட வழக்குகளை மறைந்திருப்பதாக சுயச்சை மற்றும் எதிர்க்கட்சியை சார்ந்த வேட்பாளர்கள் ஆட்சேபனை தெரிவித்த காரணத்தால், அவருடைய மனு நிறுத்தி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் அண்ணாமலை தற்சமயம் பரப்புரைப் பயணத்தில் இருக்கிறார் என்ற காரணத்தால் அவரிடம் தகவல் தெரிவித்து உரிய விளக்கம் அளிக்கப்பட்டதை அடுத்து மறுபடியும் அந்த வேட்புமனுவை தேர்தல் ஆணையத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது இதுகுறித்து பாஜகவின் மாநில துணைத் தலைவர் அண்ணாமலை தன்னுடைய வலைதளப் பக்கத்தில் என்ன பயந்துட்டியா குமாரு அந்த ஆண்டவனே நம்ம பக்கம் என்று பதிவிட்டு இருக்கிறார்.