பா.ஜ.க வேட்பாளர் குஷ்பூ மீது வழக்கு! அதிர்ச்சியில் தொண்டர்கள்!

Photo of author

By Rupa

 பா.ஜ.க வேட்பாளர் குஷ்பூ மீது வழக்கு! அதிர்ச்சியில் தொண்டர்கள்!

தமிழக சட்டமன்றத்தில் வரும் ஏப்ரல் மதாம் 6 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.இந்தநிலையில் மூத்த கட்சிகள் தன்னுடன் கூட்டணி கட்சிகளை வைத்துக்கொண்டு தீவிர பிரச்சாரம் செய்து வருகிறது.இந்த தேர்தல் பிரச்சாரமானது இன்னும் ஓர் நாளில் முடிய இருக்கிறது.அதனைத்தொடர்ந்து பிரச்சார மேடையானது அனல்கட்டி வருகிறது.

அதனைத்தொடர்ந்து மக்களிடம் நூதன முறைகளில் ஓட்டுக்களை கேட்டும் லஞ்சம் கொடுத்தும் வருகின்றனர்.இந்நிலையில் பல அரசியல் கட்சிகள் மீது தேர்தல் ஆணையம்  வழக்கு தொடுத்துள்ளது.அந்தவகையில் திமுக வேட்பாளர் மற்றும் அவரது தொண்டர்கள் 1000 பேர் மீது கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காமல் பிரச்சாரம் செய்ததாக வழக்கு தொடுத்தனர்.அதனைத்தொடர்ந்து கனிமொழி மீது குறிப்பிட பகுதியில் அனுமதி வாங்காமல் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதற்கு வழக்கு தொடுத்தனர்.

குஷ்பூ ஆயிரம் விளக்கு தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிட உள்ளார்.தற்போது அந்த தொகுதியில் தீவிரம் பிரச்சாரம் செய்து வருகின்றார்.அந்தவகையில் கோடம்பாக்கம் பகுதியில் கோவில் முன்பு பிரச்சாரம் செய்ய குஷ்பூவிற்கு அனுமதி வழங்கவில்லை.அதனால் அவர் மீது வழக்கு தொடுத்துள்ளனர்.

அதனையடுத்து அவர் மீது சட்டவிரோதமான கூடுதல் மற்றும் அரசு அதிகாரியின் உத்தரவை மீறி செயல்படுதல் ஆகிய குற்றங்களின் கீழ் குஷ்பூ மீது வழக்கு தொடுத்துள்ளனர்.இதற்கிடையே சுயேட்சை வேட்பாளர் பிரச்சாரம் செய்ய அனுமதி தருவதற்கு லஞ்சம் கேட்ட சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் தலைமைக் காவலர் குணசேகரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.