தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்றையதினம் அந்தக் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் சிடி ரவி பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுத்தார். அந்த சமயத்தில் அவர் தெரிவித்ததாவது ஜெயலலிதாவின் கனவை நிறைவேற்றுவதற்காக சசிகலா ஒரு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அதனை நான் வரவேற்கின்றேன் ஜெயலலிதாவின் கனவை நிச்சயமாக நிறைவேற்றி தமிழகம் முன்னேற அதிமுக பாடுபடும் என்று தெரிவித்திருக்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசும் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஓ பன்னீர்செல்வம் ஆகியோரின் தலைமையிலான மாநில அரசும் ஜெயலலிதாவின் கனவை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறது. டிடிவி தினகரன் அதிமுகவின் வாக்குகளை பிரிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இருந்தாலும் அவர் ஜெயலலிதாவின் கனவை நிச்சயமாக நிறைவேற்றுவார் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது என தெரிவித்து இருக்கிறார்.
பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள் சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பதற்கு முயற்சி செய்தார்களா என்று கேள்வி எழுப்பினார்கள் ஆனால் தற்சமயம் என்ன நடந்திருக்கிறது. நாங்கள் சசிகலாவை அரசியலில் இருந்து விலகுவதற்கு நிர்பந்தம் செய்யவில்லை. எல்லாமே வதந்தியாக தான் இருக்கிறது நாங்கள் அதிமுகவை எப்போதும் உடைக்க நினைத்தது கிடையாது. அதேபோல ஜெயலலிதாவின் கனவையும் நாங்கள் நிர்மூலம் ஆக்க விரும்பவில்லை. எங்களுடைய ஒரே நோக்கம் திமுக கூட்டணி வெற்றி பெறக்கூடாது என்பது தான் என்று தெரிவித்திருக்கிறார்.
அதிமுகவின் ஆட்சி எதிர்வரும் தேர்தலிலும் தொடர வேண்டும் என்பதே எங்களுடைய நோக்கம். ஆனால் திமுக ஆட்சிக்கு வந்தால் அவர்களுடைய குடும்ப நலனை மட்டுமே யோசித்து செயல் படுவார்கள் ஆனால் அதிமுக ஆட்சிக்கு வந்தால் தமிழக மக்களின் நலன் தொடர்பாக யோசித்து செயல் படுவார்கள் என்று தெரிவித்திருக்கிறார் சிடி ரவி.அவர் இவ்வாறு தெரிவித்திருப்பது சசிகலாவை மறைமுகமாக அதிமுகவில் இணைப்பதற்காக அழைப்பு விடுப்பதற்கு தான் என்று சொல்கிறார்கள்.
சசிகலா தான் அரசியலில் இருந்து ஒதுங்குவதாக விட்ட அறிக்கையில் அவர் தெரிவித்திருந்தது அதிமுகவைச் சேர்ந்த தொண்டர்கள் அனைவரும் ஒரு தாய் மக்களாக ஒன்றிணைந்து அதிமுகவை வெற்றி பெற்று ஆட்சியில் அமர வைக்க வேண்டும் என்பதுதான்.
பாரதிய ஜனதா கட்சியும் , அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும், செல்வது வெவ்வேறு பாதைகளாக இருந்தாலும்கூட நோக்கம் என்பது ஒன்றாக தான் இருக்கிறது. இதையெல்லாம் தெரிந்து கொண்ட பாரதிய ஜனதா கட்சி எப்படியேனும் சசிகலாவை அதிமுகவுடன் இணைத்து விடலாம் என்று பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.ஆனாலும் இதனை தமிழகத்தின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களும் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அவர்களும் அறவே ஏற்க மறுக்கிறார்கள்.