Annamalai BJP: காங்கேயம் பகுதியில் காங்கயம் காளை சிலை வைக்க அனுமதி கொடுக்காததற்கு பாஜக அண்ணாமலை கண்டனம்.
தமிழகத்தின் பாரம்பரியத்தின் அடையாளமாக விளங்குவது நாட்டு மாட்டினங்கள். குறிப்பாக காங்கயம் காளைகள் கொங்கு மண்டலத்தின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. இந்த நாட்டு மாட்டினம் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியை பூர்விகமாக கொண்டது. எனவே காங்கேயம் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் முன் காங்கயம் காளை சிலைக்கு வைக்க மாவட்ட நிர்வாகம் கடந்த மூன்று ஆண்டுகளாக அனுமதி மறுக்கப்பட்டு வரப்படுகிறது.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில், காணும் இடமெல்லாம் முதல்வர் ஸ்டாலின் தன் தந்தை கலைஞருக்கு சிலை வைக்கிறிங்க. காங்கேயம் பகுதியின் அடையாளமான காங்கயம் காளை சிலையை காங்கேயம் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் முன் நிறுவ மூன்று ஆண்டுகள் அனுமதி மறுப்பது ஏன்? என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார்.
தமிழக பாரம்பரிய சின்னங்களை பாதுகாப்பதில் திமுக ஏன் கவனம் செலுத்த வில்லை, திமுக ஆட்சிக்கு வரும் போது விவசாயிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற வாக்குறுதி என்ன ஆயிற்று என கேட்டு இருக்கிறார். உடனடியகா “காங்கயம் காளை சிலை” அமைக்க அனுமதி கொடுக்க வேண்டும் இல்லை என்றால் தமிழக பாஜக சார்பில் விரைவில் போராட்டம் நடத்துவோம் என அதிரடியாக தெரிவித்து இருக்கிறார்.
மேலும், பொங்கலுக்கு தமிழக மக்களுக்கு வழங்குவதாக கூறிய பரிசுத் தொகையை வழங்க வேண்டும் எனக் கூறினார்.