திமுகவை கடுமையாக விமர்சித்த பாஜக பொன். ராதாகிருஷ்ணன்!

Photo of author

By Parthipan K

பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி-மதுரை நெடுஞ்சாலையில் 70 அடி உயர பாஜக கொடி ஏற்றப்பட்டது. இதனை முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் ஏற்றிவைத்தார். மேலும் ஏழை எளியோருக்கு வேட்டி சேலைகளை வழங்கினார்.

இதனைத்தொடர்ந்து பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.” நீட் தேர்வு விவகாரத்தில் அச்சத்தில் மாணவர்கள் உயிரிழப்பது வேதனை அளிப்பதாக உள்ளது. இந்த விவகாரத்தில் அரசியல் கட்சியினர் பிணந்தின்னி கழுகுகளைப் போல அலைகின்றனர்.

அரசியல் கட்சியினர் குழப்பம் நீட் தேர்வு குறித்து அல்ல தமிழக சட்டமன்ற தேர்தலை குறித்துதான். 3 தலைமுறையாக பிணம் தின்னும் கழுகுகள் போல திமுக அரசியல் செய்து வருகிறது.

மேலும் திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று அவர் கூறுவதன் மூலம் நீட் தேர்வு குறித்து முடிவு செய்வது மாநில முதல்வர் அல்லது நாட்டின் பிரதமராக என்று கூட அவர்களுக்கு தெரியவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.

சட்டப்பேரவை கூட்டத் தொடரில் மாநிலத்தில் நடைபெறும் பிரச்சினைகளை முன்வைத்தனர் என்றால் பயனுள்ளதாக இருக்கும் இல்லை என்றால் அவர்கள் பேசாமல் இருப்பதே சாலச் சிறந்தது” என்று பொன் ராதாகிருஷ்ணன் கூறினார்.