தமிழக பாஜகவில் திடீர் டிவிஸ்ட்!.. அதிமுக – பாஜக கூட்டணி நடக்குமா?.. நடக்காதா?..

Photo of author

By அசோக்

தமிழக பாஜகவில் திடீர் டிவிஸ்ட்!.. அதிமுக – பாஜக கூட்டணி நடக்குமா?.. நடக்காதா?..

அசோக்

eps

தமிழக பாஜக தலைவர் மாற்றப்படுகிறார் என்கிற செய்திதான் கடந்த சில நாட்களாகவே செய்திகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. சமூகவலைத்தளங்களிலிலும் பலரும் இதுபற்றியே பதிவிட்டு வருகிறார்கள். குறிப்பாக திமுகவினர் மிகவும் சந்தோஷமாக இந்த செய்தியை பரப்பி வருகிறார்கள். அண்ணாமலையை அசிங்கப்படுத்தி கமெண்ட்டுகளை போட்டு வருகிறார்கள் ஆனால், பாஜக மேலிடத்தில் வேறு மாதிரி முடிவை எடுத்திருக்கிறார்கள்.

எதிர்கட்சி தலைவராக எடப்பாடி பழனிச்சாமி இருந்தும் அவர் பெரிதாக எதையும் பேசாத நிலையில், அண்ணாமலையோ திமுகவுக்கு எதிராக பேசி ஸ்கோர் செய்து வருகிறார். எனவே, அண்ணாமலை மீது திமுக மற்றும் அதிமுக இரண்டுக்குமே கோபம் ஏற்பட்டது. இவர் இருக்கும் வரை நம்மை யாரும் மதிக்க மாட்டார்கள் என பழனிச்சாமியே யோசித்ததாக சொல்லப்பட்டது. எனவே, சமீபத்தில் அமித்ஷாவை சந்தித்து பேசியபோது அண்ணாமலையை தமிழக பாஜக தலைவர் பதவியிலிருந்து தூக்கினால் மட்டுமே 2026 சட்டமன்ற தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் நாங்கள் இணைவோம் என பழனிச்சாமி சொன்னதாக செய்திகள் வெளியானது.

eps

எனவே, அண்ணாமலைக்கு மத்திய அமைச்சர் பதவியை கொடுத்துவிட்டு தமிழக பாஜக தலைவராக வேறு ஒருவரை நியமிக்க பாஜக மேலிடம் திட்டமிட்டிருப்பதாகவும் சொல்லப்பட்டது. வானதி சீனிவாசன், தமிழிசை சவுந்தர்ராஜன், எல். முருகன், கருப்பு முருகானந்தம் மற்றும் நயினார் நாகேந்திரன் ஆகியோர் இந்த லிஸ்ட்டில் இருந்தார்கள்.

இந்நிலையில், திடீர் டிவிஸ்ட்டாக இன்னும் 3 வருடங்களுக்கு தமிழக பாஜக தலைவர் பதவியில் மாற்றம் இல்லை என அமித்ஷா முடிவெடுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது. திமுகவுக்கு சரியான டஃப் கொடுப்பவர் அண்ணாமலைதான் என அமித்ஷா கருதுகிறார். அதேநேரம், அண்ணாமலை பாஜக தலைவராக நீடித்தால் எடப்பாடி பழனிச்சாமி பாஜக கூட்டணியில் இணைவாரா என்பது தெரியவில்லை.