மாணவிகளுக்கு ஸ்கூட்டி, சைக்கிள் இலவசம்: பாஜகவின் அசத்தல் தேர்தல் அறிக்கை!

Photo of author

By CineDesk

டெல்லியில் பிப்ரவரி 8ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து அங்கு தற்போது அரசியல் கட்சிகள் உச்ச கட்ட தேர்தல் பிரச்சாரங்களை செய்து வருகின்றன. இந்த நிலையில் சற்று முன்னர் பாஜக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. இந்த தேர்தல் அறிக்கையில் பெண்களை கவர்வதற்கு பல கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்துள்ளது

குறிப்பாக கல்லூரி மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டிகள் வழங்கப்படும் என்றும் பள்ளி மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. மேலும் 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தரும் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் பாஜக தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

ஏற்கனவே பெண்களை கவர்வதற்காக இலவச மெட்ரோ ரயிலில் பயணம் உள்பட பல கவர்ச்சிகரமான திட்டங்களை தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே ஆம் ஆத்மி அறிவித்துள்ள நிலையில் தற்போது பெண்கள் வாக்குகளை கவர்வதற்காக பாஜகவும் கவர்ச்சி திட்டங்களை தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இருப்பினும் ஆம் ஆத்மி, காங்கிரஸ் மற்றும் பாஜக என மும்முனைப் போட்டியில் ஆம் ஆத்மியே மீண்டும் ஆட்சியை பிடிக்க வாய்ப்பு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்