திமுக தொடர்பில் இருக்கும் பாஜக நிர்வாகிகள்! பாஜக தலைவர் அண்ணாமலை எடுத்த அதிரடி முடிவு!!

0
183
#image_title
திமுக தொடர்பில் இருக்கும் பாஜக நிர்வாகிகள்! பாஜக தலைவர் அண்ணாமலை எடுத்த அதிரடி முடிவு!
திமுக கட்சியுடன் தொடர்பில் இருக்கும் பாஜக நிர்வாகிகள் அனைவரையும் கட்சியிலிருந்து நீக்குவதற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக பாஜக கட்சித் தலைவராக அண்ணாமலை அவர்கள் பொறுப்பேற்ற பிறகு கட்சி வளர்ச்சி பணி, தேர்தல் வியூகம் போன்றவை தொடர்பாக மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகளுடன் அண்ணாமலை அவர்கள் நேரடியாக மற்றும் வீடியோ கான்ப்ரன்ஸ் மூலமாக அடிக்கடி உரையாற்றி வருகிறார்.
இந்த தகவல்களை அமைச்சர்கள் உதய்நிதி, மகேஷ் மற்றும் திமுக அமைச்சர்களுடன் நட்பு பாராட்டும் பாஜக நிர்வாகிகள் சொல்லிவிடுகின்றனர். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் அமைச்சர் தியாகராஜன் அவர்களின் ஆடியோ டேப்பை வெளியிட்டதில் இருந்து நெருக்கடியை கொடுக்க திமுக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அண்ணாமலை கருதுகின்றார்.
ஆகவே திமுக கட்சியுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் பாஜக நிர்வாகிகளை கட்சியிலிருந்து நீக்க பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து திமுக கட்சியுடன் நெருக்கமாக இருக்கும் பாஜக கட்சி நிர்வாகிகளின் விபரங்களை தமிழக பாஜக தலைமை சேகரித்து வருகின்றது.