இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள ஐபிஎல்! இன்று இரண்டு போட்டிகள்!!

0
262
#image_title
இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள ஐபிஎல்! இன்று இரண்டு போட்டிகள்!
இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. அனைத்து அணிகளும் தங்களது பிளே ஆப் சுற்றுக்கான தகுதியை பெற கடுமையாக விளையாடி வருகின்றது.
இன்று நடக்கும் முதல் போட்டியில் டேவிட் வாரனர் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியும் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் விளையாடுகிறது. இந்த இரண்டு அணிகளும் மோதும் போட்டி டெல்லியில் இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது. புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறப் பார்க்கும். அது போலவே தனது கடைசி லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்மிடல்ஸ் நடப்பு ஐபிஎல் தொடரை வெற்றியுடன் முடிக்க பார்க்கும். இதனால் முதல் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
இன்று இரவு தொடங்கும் இரண்டாவது போட்டியில் நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், க்ருணால் பாண்டியா தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியும் மோதவுள்ளது. இந்த இரு அணிகள் மோதும் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
 லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றால் 17 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் இருந்து இரண்டாவது இடத்திற்கு முன்னேறி பிளே ஆப் சுற்றுக்கும் தகுதி பெற்றுவிடும். 7வது இடத்தில் இருக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றால் மற்ற அணிகளின் வெற்றி தோல்வி குறித்து இந்த அணியில் பிளே ஆப் வாய்ப்பு இருக்கும். தோல்வி அடைந்தால் தொடரை விட்டு வெளியேறிவிடும்.