சமீபத்தில் தமிழகத்தில் நடந்து முடிந்த விக்கிரவாண்டி இடைந்தேர்தலின் போது பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் திமுகவிற்கு எதிராக எழுப்பிய முரசொலி அலுவலக மூலப்பத்திர விவகாரம் முதல் தற்போது தயாநிதிமாறன் தாழ்த்தப்பட்ட மக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசிய விவகாரம் வரை பாஜக தீவிரமாக திமுகவை எதிர்த்து வருகிறது.
இந்நிலையில் திமுக அமைப்பு செயலாளர் எஸ்.ஆர்.பாரதி தாழ்த்தப்பட்ட மக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதற்காக கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஆர்.எஸ்.பாரதியின் கைதை பாஜகவின் தேசிய செயலாளர் ஹச்.ராஜா வரவேற்பதாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.மேலும் அடுத்த கைது தயாநிதிமாறன் என்ற வகையில் சூசகமாக தெரிவித்திருந்தார்.
இவ்வாறு தாழ்த்தப்பட்ட மக்களுக்காக குரல் கொடுப்பது போல திமுகவையும் அதன் கூட்டணி கட்சி தலைவரான திருமாவளவனையும் பாஜகவின் தேசிய செயலாளர் ஹச்.ராஜா கடுமையாக விமர்சித்து வருகிறார்.இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாஜகவின் மாநில தலைவராக முருகன் நியமிக்கப்பட்டது குறித்து விளக்கம் அளிக்குமாறு திருமாவளவன் ட்விட்டரில் கேள்வி எழுப்பியிருந்தார்.
இது தொடர்பாக பதிவிட்ட ட்விட்டர் பதிவில், “சகோதரர் முருகன் அவர்களை பாஜகவின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக நியமித்தது, அவர் தலித் சமூகத்தைச் சார்ந்தவர் என்பதற்காகவா? அல்லது கட்சியை வழிநடத்தும் தலைமைக்குரிய தகுதி படைத்தவர் என்பதற்காகவா? இதுபற்றி பாஜக விளக்கம் தருமா?,” என்று அவர் கேட்டிருந்தார்.
இதனையடுத்து அதற்கு பதிலளித்த பாஜக தேசிய செயலாளர் ஹச்.ராஜா, “பாஜக திறமையைப் பார்த்தே பொறுப்பு தருகிறது. ஏற்கனவே பங்காரு லக்ஷ்மண் அவர்களை தேசிய தலைவராக நியமித்தோம். தமிழகத்தில் Dr.கிருபாநிதியை அடுத்து சகோதரர் முருகன் நியமிக்கப் பட்டுள்ளார். ஆனால் கூட்டணி கட்சி என்ற முறையில் திமுக தலைவராக ஒரு தலித்தை நியமிக்க வற்புறுத்துவீர்களா?,” என தொல் திருமாவளவனுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது.