H.ராஜா காட்டம்! மதமாற்ற கைக்கூலி பா.இரஞ்சித் படத்தை புறக்கணியுங்கள்!

Photo of author

By Parthipan K

H.ராஜா காட்டம்! மதமாற்ற கைக்கூலி பா.இரஞ்சித் படத்தை புறக்கணியுங்கள்!

பாஜக மூத்த தலைவர் தேசிய செயலாளர் எச்.ராஜா திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கர்நாடக அரசியல் நிகழ்வு, மற்றும் தமிழகத்தில் எதிர்க்கும் புதிய கல்விக்கொள்கை குறித்து பேசினார். பின்பு அவர் இயக்குனர் ரஞ்சித் குறித்தும் பேசும்போது இரஞ்சித் இயக்கத்தில் வரும் படங்களை பார்க்காதீர்கள் என்றார்.

கர்நாடக அரசியல் குறித்து பேசும் பொழுது காங்கிரஸ் கூட்டணி கட்சி சிறப்பாக செயல்படாத நிலையை கர்நாடக அரசியல் எடுத்துரைக்கிறது. குமாரசாமி தலைமையில் காங்கிரஸ் கூட்டணியில் இருப்பது காங்கிரஸ் கட்சிக்கு பிடிக்கவில்லை. அதனால் அவர்களே ஆட்சியை களைக்க சதித்திட்டம் தீட்டியுள்ளனர். விரைவில் அங்கு நல்ல ஆட்சி மலரும் என அவர் குறிப்பிட்டார்.

மேலும் அவர் கூறுகையில், நடிகர் சூர்யா புதிய கல்வி கொள்கையை எதிர்த்து பேசுவது ஒரு உள்நோக்கத்தோடு கூறுகிறார். முதலில் புதிய கல்வி கொள்கை அறிக்கையை நன்றாக படித்து பின்பு பேசவேண்டும் என்று கூறினார்.

இரஞ்சித் குறித்து பேசிய அவர் இரஞ்சித் எப்பொழுதும் இந்து மதத்தை அவமதிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. ராஜராஜ சோழன் குறித்து டைரக்டர் பா.ரஞ்சித் பேசுவதற்கு எந்த வரலாற்று ஆதாரமும் கிடையாது. இவருக்கு நோக்கம் எப்படியாவது தமிழகத்தில் சாதிய மோதலை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான். அதுக்காகத்தான் இப்படியெல்லாம் பேசி வருகிறார். 

எனக்கு சந்தேகம் ஏற்படுகிறது மதம் மாற்றும் தீயசக்திகளின் கையாளாக ரஞ்சித் செயல்படுகிறாரோ என்று இவர் செய்வது ஒரு உள்நோக்கம் உள்ளது. அவர் படங்களில் பெரும்பாலும் சாதி வன்மங்களை தூண்டுவதாகவும், சாதி அரசியலை முன்னெடுப்பதாகவும், மத சண்டையை தூண்டும் விதமாகவே அமையும். இதனால், ரஞ்சித் இயக்கும் படங்களை பொதுமக்கள் பார்க்கவே வேணாம். அவரது படங்களை பார்க்காமல் தவிர்த்து அவருக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என பேசியுள்ளார்.

இவ்வாறாக திருப்பூரில் நடந்த நிகழ்ச்சியில் புதிய கல்வி கொள்கை, கர்நாடக அரசியல், இயக்குனர் ரஞ்சித் பற்றி பேசியுள்ளார்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்