ADMK TVK: அதிமுக பாஜக கூட்டணி மீண்டும் இணைந்த நிலையில் விஜய் கட்சி தனித்துவிடப்பட்டுள்ளது. பெரும்பான்மையாக விஜய்யுடன் அதிமுக கட்டாயம் கூட்டணி வைக்கும் என்று பேச்சு அடிபட்டு வந்தது. இது குறித்த பேச்சுவார்த்தை நடத்தியும் இருவருக்கும் ஒத்துவரவில்லை. இரண்டரை ஆண்டு ஆட்சி காலம் பாதைக்கு பாதி தொகுதி வேண்டும் என்று கேட்டதால் எடப்பாடி கூட்டணியே வேண்டாம் என்று கூறிவிட்டார். இருந்தாலும் திமுகவை எதிர்ப்பதற்காக வலுவான கூட்டணியை உருவாக்க தாவேகாவை தங்களுடன் இணைத்துக் கொள்ளலாம் என்று முயற்சியில் பாஜக களமிறங்கியுள்ளது.
மற்றொரு பக்கம் பாஜகவின் அண்டர் ஏஜென்ட் தான் விஜய் என்றும் கூறுகின்றனர். இருவரும் தற்போது முதல் போக்கில் இருப்பது போல் காட்டினாலும் தேர்தல் நிறுமம் சமயத்தில் ஒன்றிணைந்து விடுவார்கள் என்றும் கூறுகின்றனர். அந்த வகையில் தமிழக பாஜக தலைவர் நையினார் நாகேந்திரன் மோடி மற்றும் மத்திய மந்திரியை சந்தித்து வந்த பிறகு எடப்பாடி உடன் ரகசிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இதில் எடப்பாடி விஜய்யுடன் கூட்டணி வைப்பது குறித்து உங்கள் தலைமை எந்த அளவிற்கு நடவடிக்கை எடுத்துள்ளது என்று கேட்டுள்ளார்??
கட்சிக்கு சம்பந்தமில்லாத நபர்களைக் கொண்டு பேச முயற்சித்தும் ஆனால் தற்போது வரை அது கை கொடுக்கவில்லை. வரும் நாட்களில் எப்படியாவது கட்சித் தலைவர்கள் மூலம் விஜய்யை தங்கள் வசம் கொண்டு வந்து விடலாம் என்று உறுதியளித்துள்ளார். என்னதான் விஜய் கூட்டணிக்கு வந்தாலும் 50 தொகுதிக்கு மேல் கட்டாயம் தரக்கூடாது இரண்டரை வருடம் ஆட்சி அமைத்தல் போன்ற எதுக்கும் நான் ஒத்து வரமாட்டேன் என்பதை தெள்ளம் தெளிவாக கூறியுள்ளார்.
அதிலும் குறிப்பாக ஆகஸ்ட் மாதத்திற்குள் விஜய் கூட்டணிக்குள் வருவாரா வரமாட்டாரா என்பதை கூறி விட வேண்டுமா. அப்போதுதான் அதிமுக பாஜகவுடன் இணைந்து எப்படி களப்பணியை அமைக்கலாம் என்பது குறித்து திட்டம் தீட்ட முடியும் என்கின்றனர். இதுவே விஜய் கூட்டணிக்குள் வரவில்லை என்றால் அதன் செயல்பாடு வேறாக இருக்கும் எனக் கூறியுள்ளனர். இதனால் விஜய்க்கு கூட்டணிக்குள் வருவதற்கு ஆகஸ்ட் மாதம் வரை கால அவகாசம் கொடுத்துள்ளதாக ரகசிய ஆலோசனையில் பேசி உள்ளார்களாம்.