அப்பா மகன் சண்டைக்கு பாஜக தான் முக்கிய காரணம்!! கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்!!

0
48
BJP is the main reason for the father-son fight!! Netizens are outraged!!
BJP is the main reason for the father-son fight!! Netizens are outraged!!

PMK BJP: பாமக கட்சிக்குள் அப்பா மகனிடையே உட்கட்சி மோதல் இருக்கும் நிலையில் இந்த ரீதியாக தற்போது வரை கூட்டணி கட்சியான பாஜக வாய் திறக்காமல் உள்ளது. ஒரு பக்கம் இவர்களின் சண்டைக்கு பாஜகவும் முக்கிய காரணம் என கூறுகின்றனர். அன்புமணி ராமதாஸ் தனது ஆதாயத்திற்காக மட்டுமே பாஜக உடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று பார்த்துள்ளாராம். இது ரீதியாக ராமதாஸ் அவர்களே செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருப்பார்.

தனது காலை பிடித்து தான் பாஜகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டார். அதிமுக பாமக கூட்டணி இயற்கை சமநிலை போன்றது என தெரிவித்திருப்பார். பாஜக கூட்டணியிலிருந்து கொண்டு இவர்களின் சண்டைக்கு மிகப்பெரிய காரணம் என்று கூறுகின்றனர். அன்புமணியிடம் அனைத்து அதிகாரத்தையும் வாங்க சொல்லி அழுத்தத்தை தருவதும் பாஜக தான் எனக் கூறுகின்றனர்.

கட்சிக்குள்ளயே சில நிர்வாகிகள் அன்புமணிக்கு எதிராக திரும்பிய நிலையில் இவ்வாறான யோசனையை பாஜக கொடுத்துள்ளதாம். இதில் ராமதாஸுக்கு துளி கூட விருப்பமில்லை என்பதை அவர் அளித்த பேட்டியின் மூலம் தெரிந்துகொள்ள முடிந்தது. தற்போது ராமதாஸ் தலைமை பொறுப்பில் இருக்கும் பட்சத்தில் இனிவரும் நாட்களில் கூட்டணி எந்த பக்கம் திரும்பும் என்பது தெரியவில்லை. குறிப்பாக வரப்போகும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் இணையலாம் என்ற பேச்சு அடிபட்டு வருகிறது.

Previous articleவிஜய்யால் அழகிரி காலை பிடிக்கும் ஸ்டாலின்.. உன்னை விட்டால் வேறு ஆளு இல்லை!!
Next articleஅதிமுக உங்களை ஏமாத்திருச்சு.. திமுக பக்கம் வந்துடுங்க!! தேமுதிக வுக்கு பகிரங்க அழைப்பு!!