அம்பேத்கர் உருவாக்கிய அரசமைப்பு சாசனத்தை அழிக்க பாஜக முயற்சி செய்கிறது!! குற்றச்சாட்டு வைத்த ராகுல் காந்தி!!
அம்பேத்கர் அவர்கள் உருவாக்கிய இந்திய மக்களின் ஆன்மாவாக விளங்கும் இந்திய அரசமைப்பு சாசனத்தை பிரதமர் மோடி அவர்களும் பாஜக தலைவர்களும் இணைந்து அழிக்க நினைப்பதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள பிண்ட் நகரில் காங்கிரஸ் கட்சி தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி அவர்கள் கலந்து கொண்டார். பின்னர் மக்கள் மத்தியில் பாஜக கட்சி பற்றியும் ஆட்சி பற்றியும் இந்திய அரசமைப்பு சாசனம் பற்றியும் மேலும் பல விஷயங்களை பேசினார்.
காங்கிரஸ் கட்சியின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட ராகுல் காந்தி அவர்கள் “மக்களே இந்திய அரசமைப்பு சாசனம் என்பது வெறும் புத்தகம் மட்டும் கிடையாது. இந்திய அரசமைப்பு சாசனமானது மக்களுக்கு உரிமைகளை பெற்றுத் தரும் சாசனம் ஆகும்.
இந்திய அரசமைப்பு சாசனத்தை அம்பேத்கர் அவர்கள் உருவாக்கினார். இந்த அரசமைப்பு சாசனம் இந்திய மக்களின் ஆன்மாவாக விளங்குகின்றது. தற்பொழுது நடைபெற்று வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்து அம்பேத்கர் உருவாக்கிய இந்திய மக்களின் ஆன்மாவாக விளங்கும் இந்திய அரசமைப்பு சாசனத்தை அழிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா, பாஜக கட்சி தலைவர்கள் அனைவரும் முயற்சி செய்கின்றனர்.
பாஜக இந்திய அரசமைப்பு சாசனத்தை அழிக்க முயற்சி செய்கின்றது. ஆனால் இந்தியா கூட்டணி கட்சிகளும், காங்கிரஸ் கட்சியும் இந்திய அரசமைப்பு சாசனத்தை காப்பாற்ற முயற்சி செய்கின்றோம். பாஜக கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களிப்பதா அல்லது காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு வாக்களிப்பதா என்று மக்கள் நீங்களே முடிவு செய்ய வேண்டும்.
வெறும் 25 தொழிலதிபர்களின் ஆதரவை வைத்து ஒட்டுமொத்த இந்தியாவையே ஆட்சி செய்ய வேண்டும் என்று பாஜக கட்சி ஆசைப்படுகின்றது. தொழிலதிபர்களுக்கு வழங்கப்பட்ட 16 லட்சம் கோடி கடன்களை தள்ளுபடி செய்துள்ள மத்திய அரசு விவசாயிகள் வாங்கிய கடன்களையும், தொழிலாளர்கள் வாங்கிய கடன்களையும் மத்திய அரசு தள்ளுபடி செய்யவில்லை.
அதோ போல இந்திய ராணுவத்தில் அக்னிப் பாதை திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பல இளைஞர்களின் வேலை வாய்ப்பு பறிபோனது. ரயில்வே உள்பட பொதுத்துறை நிறுவனங்கள் பாஜக கட்சியால் தனியார் மயமாக்கப்பட்டு வருகின்றது. பாஜக அரசு நேரடியாகவும் மறைமுகமாகவும் இட ஒதுக்கீட்டை ஒழிக்க தீவிரமாக முயற்சி செய்து வருகின்றது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி வரி அமல்படுத்தியது ஆகியவற்றால் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத வகையில் தற்பொழுது வேலைவாய்ப்பின்மை உருவாகி இருக்கின்றது. வேலைவாய்ப்பின்மை போலவே பாஜக ஆட்சியில் பணவீக்கம் உயர்ந்திருக்கின்றது.
தற்பொழுது நடைபெற்று வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் மத்திய அரசு பணிகளில் 30 லட்சம் காலியிடங்கள் நிரப்பப்படும். அதே போல இந்தியா முழுவதும் வேலை வாய்ப்பை அதிகரிக்க தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று ராகுல் காந்தி அவர்கள் உறுதி அளித்து பேசினார்.