விரைவில் பாரதிய ஜனதாவில் நடைபெற இருக்கும் முக்கிய நிகழ்வு! பரபரப்பான பாரதிய ஜனதா கட்சி!

Photo of author

By Sakthi

விரைவில் பாரதிய ஜனதாவில் நடைபெற இருக்கும் முக்கிய நிகழ்வு! பரபரப்பான பாரதிய ஜனதா கட்சி!

Sakthi

அண்மையில் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. அதில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருந்த திரு. முருகன் அவர்களுக்கு மத்திய இணை அமைச்சராக பொறுப்பு கொடுக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக திரு. அண்ணாமலை நியமிக்கப்பட்டார். இதனையடுத்து அவர் எதிர்வரும் 16ம் தேதி பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அந்த கட்சியின் மாநில தலைவராக முறைப்படி பதவி ஏற்க இருப்பதாக பாரதிய ஜனதா கட்சியின் தலைமை தெரிவித்து இருக்கின்றது.

இதுதொடர்பாக தமிழக பாரதிய ஜனதா கட்சியின் பொதுச் செயலாளர் நாகராஜன் வெளியிட்டு இருக்கும் ஒரு அறிவிப்பில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா அவர்கள் திரு.அண்ணாமலையை தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவராக அறிவித்த செய்தி நாம் எல்லோருக்கும் மகிழ்ச்சி தரும் செய்தியாக இருக்கிறது என்று தெரிவித்திருக்கின்றார்.

மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் கோயம்புத்தூரில் ஆரம்பித்து சென்னை வரையில் சாலை மார்க்கமாக வருகை தர இருக்கின்றார். அவர் வருகை தரும் வழி நெடுகிலும் ஆங்காங்கே மாநில தலைவருக்கு வரவேற்பு கொடுத்து விட நாங்கள் ஏற்பாடுகள் செய்ய வேண்டும். உடனடியாக அந்தந்த மாவட்ட தலைவர்கள் அதற்கான ஏற்பாடு மற்றும் வரவேற்பு குழுவினை அமைத்து மிகச் சிறப்பான முறையில் அவருக்கு வரவேற்பு தர வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்து இருக்கின்றார்.

பாஜகவின் மாநில தலைவர் திரு. அண்ணாமலை அவர்கள் எதிர்வரும் 16ஆம் தேதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணி அளவில் கட்சியின் தலைமையகமான கமலாலயத்தில் மாநில தலைவராக முறைப்படி பொறுப்பேற்க இருக்கிறார். இதில் மத்திய இணை அமைச்சர் முருகன், தேசிய பொதுச் செயலாளர் ரவி, தேசிய இணை செயலாளர் சுதாகர் ரெட்டி, முன்னாள் மாநில தலைவர் இல கணேசன், முன்னாள் மாநில தலைவர் பொன் ராதாகிருஷ்ணன், முன்னாள் தேசிய செயலாளர் ஹெச் ராஜா, தேசிய செயற்குழு உறுப்பினர் இராதா கிருஷ்ணன், உள்ளிட்டோர் மாநில தலைவர் தலைவர் இருக்கையில் அமரவைத்து பொறுப்பேற்க வைப்பார்கள் என்று தெரிவித்திருக்கின்றார்.