பாஜக முக்கிய எம் எல் ஏ சஸ்பெண்ட்! வெடிக்கும் தொண்டர்களின்  போராட்டம்!

Photo of author

By Rupa

பாஜக முக்கிய எம் எல் ஏ சஸ்பெண்ட்! வெடிக்கும் தொண்டர்களின்  போராட்டம்!

Rupa

BJP main MLA suspended! Explosive volunteers struggle!

பாஜக முக்கிய எம் எல் ஏ சஸ்பெண்ட்! வெடிக்கும் தொண்டர்களின்  போராட்டம்!

தெலுங்கானா மாநிலத்தின் கோஷம்மாள் என்ற தொகுதியின் எம்எல்ஏ தான் ராஜா சிங். இவர் நேற்று மக்கள் முன்னிலையில் உரையாற்றும் போது நகைச்சுவை கலைஞரரான  முனாஃபர்வருக்கு என்பவரை விமர்சித்துள்ளார். அதனை தொடர்ந்து நபிகள் நாயகம் பற்றியும் அவதூறாக பேசியுள்ளார். இவ்வாறு கேலி மற்றும் அவதூறாக பேசிய வீடியோ சமூகவளைத்தளத்தில்  வைரலாக பரவியது.

நபிகள் நாயகம் பற்றி அவதூறாக பேசியதை பார்த்த இஸ்லாமியர்கள் ஒன்று சேர்ந்து உடனடியாக போராட்டத்தில் இறங்கினர். போராட்டத்தையடுத்து  நபிகள் நாயகத்தை குறித்து அவதூறாக பேசியதின் அடிப்படையில் அந்த எம்எல்ஏ மீது வழக்கு போடப்பட்டது. பின்பு அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

அவரை கைது செய்ததையடுத்து அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவ்வாறு ஓர் பக்கம் போராட்டம் நடந்து வந்த சூழலில் பாஜக நபிகள் நாயகம் பற்றி அவதூறாக பேசிய  எம்எல்ஏ வை தற்காலிகமாக பணியிடை  நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.