BJP NTK: பாஜக தமிழகத்தின் திமுகவிற்கு எதிரான அதிருப்தி நிறைந்த கட்சிகளை கூட்டணியில் இணைக்க முயற்சி செய்து வருகிறது. அந்த வகையில் சீமானிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை இருந்தபோது சீமானிடம் மிகுந்த நெருக்கம் காட்டியது குறிப்பிடத்தக்கது. அதேபோல சீமானும் பாஜகவுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டங்கள் எதிலும் கலந்து கொள்ளவில்லை. தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்தார்.
திமுக அதிமுக இரு கட்சிக்கும் குறைந்தபட்ச வாக்கு வித்தியாசமே இருக்கிறது. குறிப்பாக புதிய தமிழகம் நாம் தமிழர் கட்சி போன்றோர்கள் இதனை பெறுகின்றனர். அவர்களையும் கூட்டணியில் இணைத்துக் கொண்டால் அனைவரின் வாக்கும் ஒன்றுபடும். அப்படி இருக்கையில் திமுக தனது டெபாசிட்டை கூட இழக்க அதிக வாய்ப்புள்ளது. தற்சமயம் பாஜகவின் மூத்த நிர்வாகியான எஸ்ஜி சூர்யா விடம் சீமான் அரை மணி நேரத்திற்கு மேலான ஆலோசனை செய்து வந்துள்ளார்.
இதற்குப் பின்னணியில் என்ன காரணம் இருக்குமென பலரும் கேட்டு வருகின்றனர். இந்த ஆலோசனையில் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை தொகுதி பிரிப்பு போன்றவை இருந்திருக்கும் என்ற தகவல்கள் கமலாலே வட்டாரங்களில் உலாவி வருகிறது. எங்கள் கூட்டணி குறித்து அறிவிப்பு வெளிவந்தால் தமிழக வெற்றிக் கழகத்திற்கு சாதகமாக அமைந்துவிடும். ஏனென்றால் திமுக அதிமுக வேண்டாம் எனையின்றி மாற்றாட்சி வேண்டுமென்று நினைப்பார்கள் பெரும்பாலும் சீமானை தான் தேர்வு செய்வார்கள்.
அப்படி இருக்கையில் தற்போது இவர் தேசிய கட்சியுடன் இணைகிறார் என்றால், கட்டாயம் இவருடைய வாக்குகள் அனைத்தும் விஜய் பக்கம் திரும்ப அதிக வாய்ப்புள்ளது. அதேபோல திமுகவிற்கு இது பலவீனத்தையே ஏற்படுத்தும்.