விஜய்யின் வாரிசு படத்திற்கு பாஜக நிர்வாகி கமெண்ட்! திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்

Photo of author

By CineDesk

விஜய்யின் வாரிசு படத்திற்கு பாஜக நிர்வாகி கமெண்ட்! திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்

CineDesk

Updated on:

varisu

விஜய்யின் வாரிசு படத்திற்கு பாஜக நிர்வாகி கமெண்ட்! திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்

தமிழ் திரைப்பட உலகில் மிகப்பெரிய கதாநாயகனாக வளம் வருபவர் நடிகர் விஜய் , இளையதளபதிக்கு என்று ஒரு மிக பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது என்று கூறினால் அது மிகைஆகாது. இவரது படங்களும் பல்வேறு மொழிகளில் வெளிவந்து வெற்றி வாகை சூடி கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது .

இந்த நிலையில் வரும் பொங்கலை முன்னிட்டு வெளிவரவிருக்கும் வாரிசு படத்திற்கும் வழக்கம்போல் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிபார்ப்பு இருந்து வருகிறது. இப்படத்தை வம்சி இயக்கி உள்ளார் இதில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார்,

மேலும் பிரக்காஷ்ராஜ், சரத்குமார், குஷ்பு, ஷாம், யோகி பாபு மற்றும் பலர் நடித்து வருகின்றனர். படக்குழுவினர் நேற்று மாலை முதல் பாடல் ப்ரோமோ நடைபெறும் என்று அறிவித்து இருந்தது .

இந்த நிலையில் தமன் இசையில் விஜய் பாடியிருக்கும் ரஞ்சிதமே பாடல் வெளியாகி உள்ளது. பாடல் வெளிவிடும் முன்பே விஜய்யின் மாஷ் போஸ்டரை வெளியிட்டதால் தளபதி ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர் .

விஜய்யின் இந்த லுக் பார்த்து வியப்படைந்த பாஜக நிர்வாகியான அமர் பிரசாத் ரெட்டி நடிகர் விஜய்யை பாராட்டியுள்ளார். அந்த ட்வீட்டை பார்த்த விஜய் ரசிகர்கள், விஜயை பாராட்டி ட்வீட் போட்டால் பாஜாக கட்சிக்கு ஆதரவு அளிப்போம் என்று நினைத்து விட்டீர்களா என்று கடுமையான வார்த்தைகளால் ட்வீட் செய்து வருகின்றனர்.