போஸ்டரை அடிச்சது யாரு?!.. நிர்வாகி விளக்கம்!. ஆனாலும் இவ்ளோ நக்கல் ஆகாது!…

Photo of author

By அசோக்

போஸ்டரை அடிச்சது யாரு?!.. நிர்வாகி விளக்கம்!. ஆனாலும் இவ்ளோ நக்கல் ஆகாது!…

அசோக்

poster

தமிழகத்தில் பல வருடங்களாகவே மத்திய அமைச்சர் அமித்ஷாவையும், தமிழ் பட இயக்குனர் சந்தானபாரதியையும் இணைத்து பல மீம்ஸ்கள் வெளியானது உண்டு. ஏனெனில், இருவரின் உருவ ஒற்றுமை கொஞ்சம் ஒரே சாயலில் இருக்கும். அதோடு, அம்மன் படத்தில் வரும் வில்லனோடு ஒப்பிட்டும் மீம்ஸ்களை உருவாக்கி வைரல் ஆக்கினார்கள். இதை திமுகவினர் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்த பாஜகவினைரை கிண்டலடிப்பதுண்டு. ஒருபக்கம், அமித்ஷா வரவேற்கும் போஸ்டர்களில் அவரில்லாமல் அவருக்கு பதில் சந்தான பாரதி உருவத்தை வைத்தும் போஸ்டர்களை உருவாக்கி அவர்களே பல இடங்களிலும் ஒட்டி அதை பாஜகவினர் செய்தார்கள் என்பது போலவும் காட்டப்படுவதுண்டு.

ஒருபக்கம், தமிழகத்தில் குறிப்பிட்ட சதவீத ஓட்டுக்களை பாஜக வாங்கி வருகிறது. 2026 சட்டமன்ற தேர்தல் வருவதால் தமிழகத்தில் அதிக ஓட்டுக்களை வாங்க பாஜக திட்டமிட்டு காய்களை நகர்த்தி வருகிறார்கள். தேர்தல் வரும்போது அமித்ஷாவும் அடிக்கடி தமிழகம் வந்து சில தொகுதிகளில் பேசி பிரச்சாரம் செய்வார். அந்தவகையில் விரைவில் ராணிப்பேட்டைக்கு வரவிருக்கிறார்.

இந்நிலையில்தான் ராணிப்போட்டையில் சுவரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அமித்ஷாவுக்கு பதில் இயக்குனரும், நடிகருமான சந்தானபாரதி புகைப்படத்தை அச்சிட்டு ‘இந்தியாவின் இரும்பு மனிதரே.. வாழும் வரலாறே.. வருக வருக..’ என எழுதியிருக்கிறார்கள். அந்த போஸ்டரில் அருள் மொழி, மாநில செயற்குழு உறுப்பினர், ராணிப்பேட்டை என குறிப்பிடப்பட்டிருந்தது. இதைப்பார்த்து பலரும் சிரித்துக்கொண்டிருந்தார்கள்.

இந்நிலையில், இது தொடர்பாக விளக்கமளித்துள்ள அருள் மொழி ‘அமித்ஷாஜி அரக்கோணத்திற்கு வருவதை தெரிந்துகொண்டு அவருக்கு பதில் வேறு ஒருவரை வைத்து அதில் என் பெயரையும் போட்டு ஒட்டி போஸ்டரை உருவாக்கி ஒட்டியிருக்கிறார்கள். இதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதை செய்தவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்கவிருக்கிறேன்’என விளக்கமளித்துள்ளார்.