அண்ணாமலை திட்டத்திற்கு செக் வைத்த பாஜக தேசிய தலைமை!! திக்குமுக்காடும் தமிழக பாஜக தலைவர்!
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற போவதையொட்டி அனைத்து கட்சிகளும் அதற்கான பணிகளை தற்போதையிலிருந்து செய்துவரும் நிலையில் பாஜக அண்ணாமலை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி போல திருச்செந்தூரில் இருந்து நடை பயணம் மேற்கொள்ள போவதாக தெரிவித்திருந்தார்.
வரும் ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி இந்த நடைபயணம் நடைபெறும் என்று திட்டவட்டமாக தெரிவித்திருந்த நிலையில் இதனை ரத்து செய்யும் விதமாக பாஜக தலைமை புதிய பதவி ஒன்றை வழங்கி உள்ளது.
இதற்கு முன்பாக தமிழக பாஜக தலைவராக இருந்த எல் முருகனும் வேல் யாத்திரை என்ற பயணத்தின் மூலம் தமிழகத்தில் பெரும் ஆதரவை திரட்டியதால் இவரும் திருச்செந்தூரில் இருந்து தமிழ்நாடு முழுவதும் வேல் பயணம் என்றவாறு சுற்ற இருந்த நிலையில் தற்போது பாஜக தேசிய தலைமை செக் வைத்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் தற்போது சட்டமன்ற தேர்தல் வருவதையொட்டி அங்கு மேலிடை பொறுப்பாளர் பதவி அண்ணாமலைக்கு வழங்கி உள்ளனர். இந்த நிலையில் அங்குள்ள கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை செய்து தொகுதிகள் குறித்து முடிவுகள் எடுக்க வேண்டும் என்றவாறு அவருக்கு வேலைகள் இருந்த வண்ணமாகத்தான் இருக்கும்.
இவ்வாறு கட்சி வேலைகளானது கர்நாடக மாநிலத்தில் அதிகமாக இருக்கும் சூழ்நிலையால் தற்பொழுது இவரால் இந்த திருச்செந்தூர் நடைபயணத்தை மேற்கொள்ள இயலாது.
ஒரு சிலர் பாஜக மூத்த நிர்வாகிகளுக்கு அண்ணாமலை பிடிக்காத காரணத்தினால் மேலிடத்தில் இவ்வாறு அழுத்தம் கொடுத்து கர்நாடக மாநிலத்தில் சிறிது காலம் பிசியாக வைத்திருக்க கோரி அவரது திட்டத்தை ரத்து செய்ததாகவும் கூறுகின்றனர். உட்கட்சிக்குள்ளையே நிர்வாகிகளுடன் அதிருப்தி உண்டான சூழல் இருப்பதாகவும் அரசியல் சுற்று வட்டாரங்கள் பேசி வருகிறது.