#BJP: உச்சநீதிமன்றம் ரத்து செய்த தேர்தல் பத்திரத்தின் மூலம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மிரட்டி பணம் பெற்றதின் பேரில் போலீசார் எப் ஐ ஆர் போட்டு வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பாஜக 2017 ஆம் ஆண்டு தேர்தல் பத்திரம் வழங்கும் திட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட்டதில் 2018 ஆம் ஆண்டு நடைமுறை படுத்தியது. இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்ததும் எதிர்க்கட்சிகள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். சட்டத்திற்கு புறம்பாக நன்கொடை பெறுவது மிகவும் தவறானது என கூறியிருந்தனர். அதேபோல ஸ்டேட் பேங்க் வங்கி கிளை மூலம் யார் வேண்டுமானாலும் தேர்தல் பத்திரம் வாங்கி கட்சிகளுக்கு தங்களது பெயர் ஏதும் கொடுக்காமல் இதன் மூலம் நன்கொடை அளிக்கலாம்.
இது குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இத்திட்டமானது ரத்து செய்யப்பட்டது. மேற்கொண்டு 2019 ஆம் ஆண்டு முதல் பெற்ற அனைத்து தேர்தல் பத்திரத்தின் தரவுகள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தனர். இவ்வாறு இருக்கையில் சமீபத்தில் பாஜக, நிர்மலா சீதாராமன் மற்றும் ஜேபி நட்டா உள்ளிட்ட பெரும் தலைகள் பலரிடம் தேர்தல் பத்திரத்தின் மூலம் மிரட்டி நன்கொடை வாங்கியதாக புகார்கள் வந்தது.
அத்தோடு இவர்கள் மீது ஜனாதிகார சங்கர் ஷாப் வர்ஷத் அமைப்பின் துணைத் தலைவரும் மிரட்டி பணம் பெற்றதாக புகார் அளித்துள்ளார். அதன் பேரில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது தற்பொழுது வழக்கு பதிவு செய்து எஃப் ஐ ஆர் போடப்பட்டுள்ளது. இவ்வாறு சட்டத்திற்கு எதிராக தேர்தல் பத்திரத்தின் மூலம் பணம் பெற்றதால் இவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என கர்நாடக முதல்வர் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.