கோவா மாநிலத்தில் கட்சிகளின் ஆதரவுடன் மீண்டும் அரியணையில் ஏறுகிறது பாரதிய ஜனதா கட்சி!

Photo of author

By Sakthi

நாடு முழுவதும் பரபரப்பை கிளப்பிய உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல்கள் சமீபத்தில் நடந்து முடிந்தனர்.
அதிலும் நாட்டிலேயே மிகப்பெரிய மாநிலமாக இருக்கும் உத்திரப்பிரதேசத்தில் ஆட்சியை கைப்பற்ற போவது யார் என்ற எதிர்பார்ப்பு தொடக்கத்திலிருந்தே இருந்தது.

இந்த நிலையில், பாரதிய ஜனதா ஆட்சி நடந்து வரும் கோவா மாநிலத்தில் கடந்த 14ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற்றது. பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே கடுமையான நேரடி போட்டி நிலவியது. மகாராஷ்டிரவாடி கோமந்தக்கட்சி, ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், உள்ளிட்ட கட்சிகளும் இதில் போட்டியிட்டதாக தெரிகிறது.

இந்த 5 மாநில சட்டசபைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன நேற்று எண்ணப்பட்ட வாக்குகளில் தொடக்கத்தில் காங்கிரஸ் கட்சி அதிக தொகுதிகளில் முன்னிலை வகிக்க ஆரம்பித்தது. ஆனாலும் அடுத்தடுத்த சுற்றுகளில் நிலைமை மாறிப்போனது.

பாரதிய ஜனதா அதிக இடங்களில் முன்னிலை பெற்று வந்தது. அதே நிலை நீடித்து பாஜக 20 தொகுதிகளில் வெற்றி பெற்றது. முதலமைச்சர் பிரமோத் சவந்த் மற்றும் அமைச்சர்கள் பலர் வெற்றி பெற்றார்கள்.

அந்த மாநிலத்தில் மொத்தமுள்ள 40 தொகுதிகளை கணக்கில் வைத்துப்பார்த்தால் ஆட்சி அமைக்க குறைந்தபட்சம் 21 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். ஆகவே தனிப்பெரும்பான்மைக்கு பாரதிய ஜனதாவிற்கு ஒரே ஒரு தகுதி குறைவாக இருந்து வருகிறது.

. ஆனாலும் கூட வெற்றி பெற்ற 3 சுயேட்சைகள் பாஜகவுக்கு ஆதரவு தருவதற்கு முன் வந்திருப்பதாக பாரதிய ஜனதா கட்சி தெரிவித்திருக்கிறது.

இது தொடர்பாக கோவா மாநில முதலமைச்சர் பிரமோத் சவந்த் தெரிவித்ததாவது, பாரதிய ஜனதா ஆட்சியின் மீது கோவா மக்கள் வைத்திருக்கின்ற நம்பிக்கைக்கு நன்றி. கடந்த 10 வருட காலமாக வளர்ச்சி பணிகளுக்கு மக்கள் வாக்களித்திருக்கிறார்கள் என தெரிவித்திருக்கிறார்.

பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைப்பதற்கு யார் ஆதரவு கொடுத்தாலும் வரவேற்போம் 3 சுயேச்சைகள் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள் அவர்கள் மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் சதானந்த் ஷெட் தனவாடேவிடம் ஆலோசனை நடத்தியிருக்கிறார்கள் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

கோவா மாநில பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பொறுப்பாளரும் மராட்டிய மாநில முன்னாள் முதல் அமைச்சருமான தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்ததாவது, ஆட்சியமைக்க சுயேட்சைகள் மற்றும் மாநில கட்சிகளின் ஆதரவை ஏற்றுக்கொள்வோம் எப்போது ஆட்சி அமைக்க உரிமை கோருவது என்பதை பாரதிய ஜனதா ஆட்சிமன்ற குழு தெரிவித்த பிறகு முடிவு செய்வோம் என்று அவர் கூறியிருக்கிறார்.

பாரதிய ஜனதா கட்சிக்கு மகாராஷ்டிரவாடி, சோமந்த கட்சியும் 3 சுயேச்சை சட்டசபை உறுப்பினர்களும் ஆதரவு கடிதம் வழங்கியிருப்பதாக மாநில பாஜகவின் தலைவர் தெரிவித்தார். ஆகவே பாஜகவின் பலம் 25 ஆக அதிகரித்திருக்கிறது என கூறியிருக்கிறார்.

கடந்த 2017ஆம் வருடம் சட்டசபை தேர்தலிலும் பாஜகவிற்கு தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை 13 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது அதன்பின்னர் மாநில கட்சிகளின் ஆதரவுடனும் மற்றும் சுயட்சைகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்தது. இப்போதும் அவர்களுடைய ஆதரவுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது என தெரிவித்தார்.

இந்த தேர்தலில் 3 தம்பதிகள் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக போட்டியிட்ட சுகாதாரத்துறை அமைச்சர் விஸ்வஜித் ராணா அவருடைய மனைவி திவ்யா உள்ளிட்டோர் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர்களான அடனாசியோ மற்றும் அவருடைய மனைவி ஜெனிபர் உள்ளிட்டோர் வெற்றி பெற்றார்கள் காங்கிரஸ் கட்சியின் சார்பாக களத்தில் நின்ற மைக்கேல் லோபோ, அவருடைய மனைவி டெலிலா உள்ளிட்டோரும் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

ஆனாலும்கூட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சார்பாக போட்டியிட்ட இரண்டு தம்பதிகள் தோல்வியை கண்டிருக்கிறார்கள்.