அரவிந்த் கெஜ்ரிவால் வாழ்க்கையில் விளையாடும் பாஜக! எம்.பி சஞ்சய் சிங் பேட்டி

0
273
Why does the Prime Minister hate Kejriwal so much..?? Arvind Kejriwal being bullied in jail..!!
Why does the Prime Minister hate Kejriwal so much..?? Arvind Kejriwal being bullied in jail..!!

அரவிந்த் கெஜ்ரிவால் வாழ்க்கையில் விளையாடும் பாஜக! எம்.பி சஞ்சய் சிங் பேட்டி

ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களின் வாழ்க்கையில் பாஜக கட்சி விளையாடுகின்றது என்று மாநிலங்களவையில் எம்.பி சஞ்சய் சிங் அவர்கள் பேட்டி அளித்துள்ளார்.

மதுபான ஊழல் வழக்கில் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் கடந்த மார்ச் மாதம் 21ம் தேதி அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் தொடர்ந்து 90 நாட்களாக சிறையில் இருந்து வந்தார். இதையடுத்து அவருக்கு இடைக் ஜாமீன் கொடுப்பதாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களை கலால் கொள்கை முறைகேடு தொடர்பாக சிபிஐ காவல்துறையினர் கடந்த ஜூன் 26ம் தேதி கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் சிறையை விட்டு வெளிவர முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாநிலங்களவை எம்.பி சஞ்சய் சிங் அவர்கள் பாஜக கட்சி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களின் வாழ்க்கையில் விளையாடுகின்றது என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக எம்.பி சஞ்சய் சிங் அவர்கள் “சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களை விரைவில் சிறையிலிருந்து வெளியே கொண்டுவந்து அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும். இல்லையென்றால் அவருக்கு மோசமான சம்பவம் நடக்கக் கூடும்.

கலால் கொள்கை முறைகேடு தொடர்பாக கைது செய்யப்படும் பொழுது டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் 70 கிலோவாக இருந்த நிலையில் தற்பொழுது அவர் 61.5 கிலோவாக மாறியுள்ளார். இதற்கு காரணம் சோதனைகள் எதுவும் சரியாக செய்யாமல் இருப்பது தான். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களின் உடல் எடை இழப்பு பலவிதமான தீவிர நாய்களுக்கு வழிவகுக்கும்.

ஆம் ஆத்மி கட்சி, அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களுடைய குடும்பம், அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களின் நலம் விரும்பிகள் என அனைவரும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களின் உடல் நலத்தை பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆனால் மத்தியில் ஆளும் பாஜக அரசின் நோக்கம் என்னவென்றால் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களை சிறையில் அடைத்து அவருடைய உயிருடன் விளையாடுவது மட்டும் தான். முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் கடுமையான உடல்நலம் பிரச்சனைகளை சந்திக்க வேண்டும் என்பதற்காகவே பாஜக அரசு சதி செய்கின்றது” என்று கூறினார்.

Previous articleபிரபல இயக்குநர் திடீர் தற்கொலை! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!
Next articleKUDAL PUZHU: குடற்புழுக்கள் நீங்க.. இந்த பொடியை சாதத்தில் கலந்து சாப்பிடுங்கள்!!