பாஜகவை கலாய்த்தவர்களுக்கு எல்.முருகன் கொடுத்த பதிலடி பதில்!

0
149

சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று தமிழகத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்றார். அதிமுக கூட்டணியில் இருந்த பாரதிய ஜனதா கட்சி நான்கு தொகுதிகளில் வெற்றி பெற்றது.

அந்தக் கட்சியைப் பொறுத்தவரையில் தமிழகத்தில் தாமரை மலரவே மலராது என்று பலரும் தெரிவித்துள்ளார்கள். ஆனால் சுமார் 20 வருடங்களுக்கு பின்னர் அந்த கட்சியில் இருந்து நான்கு சட்டசபை உறுப்பினர்கள் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். மீது அந்த கட்சிக்கு புது உத்வேகமாக இருப்பதாகவே பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் சட்டசபை கூட்டம் இன்று நடைபெற்றது இந்த நிலையில், இன்று சட்டசபை உறுப்பினர்கள் தங்களுடைய பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டார்கள். இதற்கு முன்னதாக கடந்த 7ம் தேதி தமிழகத்தின் முதலமைச்சராக ஸ்டாலின் பதவி ஏற்றுக்கொண்டார். அவருடன் 33 அமைச்சர்களும் தங்களுடைய பதவிகளை பெற்றுக் கொண்டார்கள்.

இவ்வாறான சூழலில், தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் முருகன் சென்னை தியாகராய நகரில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் தெரிவித்ததாவது, தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி வரவே வராது என்று தெரிவித்தார்கள்.

சிலர் பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாட்டில் தலை தூக்கவே முடியாது தாமரை மலரவே மலராது தாமரை சேற்றில் தான் மலரும் என்று பலவாராக அவதூறுகள் தெரிவித்தார்கள். அவர்களுக்கு தக்க பதிலடி வழங்கியது போல இருபது வருடத்திற்கு பின்னர் தமிழக சட்டசபைக்கு பாரதிய ஜனதா கட்சியின் சட்டசபை உறுப்பினர்கள் சட்டசபைக்கு சென்று விட்டார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.

Previous articleஇலவச பயணம் எதிரொலி! தனியார் பேருந்து கட்டணம் குறைப்பு!
Next articleவிரைவில் சந்திக்க இருக்கும் திமுகவின் இரு துருவங்கள்!