நோய் தடுப்பு பணி! முதலமைச்சருக்கு பாராட்டு தெரிவித்த பாஜக பிரமுகர்!

0
121

தமிழக அரசியலைப் பொறுத்தவரையில் தற்போது பாரதிய ஜனதா கட்சியும் ஆளும் கட்சியான திமுகவும் பரம எதிரிகளாக இருந்து கொண்டு இருக்கின்றன. இந்த நிலையில் நோய் தடுப்பு குறித்து தமிழக அரசை பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகர் ஒருவர் பாராட்டி இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

இதுகுறித்து எம்ஜிஆர் கால சுகாதாரத்துறை அமைச்சரும் தற்போது பாஜகவில் இருந்து வருபவருமான 94 வயதான டாக்டர் ஹண்டே முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நேற்றையதினம் கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார்.

அந்தக் கடிதத்தில் நோய்த்தொற்று காரணமாக, பெற்றோரை இழந்து ஆதரவற்ற நிலையில் இருக்கின்ற குழந்தைகளை பராமரிப்பது குறித்து நீங்கள் அறிவித்திருக்கின்றன அறிவிப்பை விட உங்களுடைய பாசமிகு தந்தை கருணாநிதிக்கு சிறப்பான பிறந்தநாள் பரிசை அளித்து இருக்கவே இயலாது. கோயமுத்தூர் மாவட்டத்தில் இருக்கின்ற மருத்துவமனையில் நோய்த்தடுப்பு வார்டுக்கு சென்று நோயாளிகளை சந்தித்து நலம் விசாரித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி கலந்த ஒரு ஆச்சரியத்தை தருகிறது என்று தெரிவித்திருக்கிறார்.

கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் தொண்ணூற்று நான்கு வருடங்களுக்கு முன்னர் நான் பிறந்தேன். என்னுடைய தந்தை டாக்டர் ஹச்.எம்.ஹண்டே அங்கேதான் மருத்துவராக பணிபுரிந்தார் என்று தெரிவித்து இருக்கிறார்.

அதே சமயம் தங்களுக்கு நான் ஒரு முக்கியமான வேண்டுகோள் வைக்கிறேன் தயவுசெய்து இதுபோன்ற ஆபத்தான இடங்களுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம். உங்களுடைய ஆரோக்கியம் தான் தமிழகத்தின் மிக மிக முக்கியமான ஆரோக்கியமாகவும் இரவு பகலாக உங்களுடைய அயராத உழைப்பு காரணமாக, நோய்த்தொற்றின் இரண்டாவது அலை தமிழ்நாட்டில் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. உங்களுடைய தொடர்ச்சியான வெற்றிகளுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்று தெரிவித்திருக்கிறார் ஹச்.வி.ஹண்டே