வேல் யாத்திரைக்கு தடைவிதித்ததை அடுத்து அதிரடி முடிவெடுத்த பாஜக! அதிர்ந்து போன தமிழகம்!

Photo of author

By Sakthi

வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்க கோரி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆங்காங்கே ஆர்ப்பாட்டத்தில் பாஜக வினர் ஈடுபட்டனர் பாஜக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

வேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி மறுத்ததை கண்டித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் மகாஜன் தலைமையில் அந்தக் கட்சியினர் நூற்றுக்கும் அதிகமானோர் வேலுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதேபோல இந்த யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி வழங்க வலியுறுத்தி கடலூரில் சாலை மறியலில் ஈடுபட்ட பாஜகவினர் 200க்கும் அதிகமானோர், காவல்துறையினர் கைது செய்யப்பட்டனர் இதன் காரணமாக கடலூர் காவல் நிலையம் அருகே பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

இதன் காரணமாக அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாக காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டனர்.

இதேபோல திருப்பூர் பேருந்து நிலையம், தென்காசி, சங்கரன்கோவில், கிருஷ்ணகிரி, ஆகிய இடங்களில் பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர் இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்து இருக்கிறார்கள்.