தமிழகத்தில் தற்போது உள்ள அரசியல் சூழ்நிலையில் எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தில் இருக்கும் அதிமுக திமுகவிற்கு சரியான போட்டியை வழங்கவில்லை என்றே சொல்ல வேண்டும்.
அதோடு திமுக ஆட்சிக்கு வந்து உடனடியாக அதிமுகவின் பல முக்கிய புள்ளிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறையை ஏவி விட்டு அதிரடி சோதனை நடத்தியது. இதன் காரணமாக அதிமுக சற்றே அச்சத்துடன் இருக்கிறது என்றே தோன்றுகிறது.
அதேநேரம் எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்ட பிறகு அவரைக் கண்டு திமுக சற்றே பயத்துடனே இருந்தது என்று சொன்னால் அது மிகையாகாது. ஆனால் அதிகாரம் தன்னுடைய கைக்குள் வந்து விட்டபடியால் அவரையும் தன்னுடைய கட்டுக்குள் வைக்க திமுக அரசின் திட்டமிட்டு பலவிதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு கட்டமாக தான் கொடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பான வழக்கை கையில் எடுத்தது திமுக அரசு. அந்த வழக்கில் எப்படியாவது எதிர்க்கட்சித் தலைவரை சிக்க வைத்து விட வேண்டும் என்று திமுக தொடர்ந்து முயற்சித்து வருகிறது.
அதற்காக தான் டி ஐ ஜி சுதாகர் தலைமையில் தனிக் குழுவை அமைத்து விசாரணை நடத்தியது ஆனால் அவருடைய விசாரணையின் அடிப்படையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக எந்த விதமான ஆதாரமும் கிடைக்கவில்லை அவரை எப்படியாவது கைது செய்ய வேண்டும் என்று சுதாகருக்கு மாநில அரசு அழுத்தம் கொடுக்கவே ஆதாரம் இல்லாமல் அவரை கைது செய்ய முடியாது என்று மறுத்துவிட்டார் சுதாகர்.
இதனால் கடுப்பான தமிழக அரசு கொடநாடு கொலை மற்றும் கொள்ளை தொடர்பான வழக்கை அவரிடம் இருந்து திரும்பப் பெற முடிவு செய்தது.
இதனைத் தொடர்ந்து மேற்கு மண்டல ஐஜியாக தேன்மொழி நியமனம் செய்யப்பட்டார் அதோடு உளவுத்துறை சிறப்பு பிரிவு அதிகாரியாகவும் அவருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.
கூடுதலாக எடப்பாடி பழனிச்சாமியை கைது செய்ய வேண்டும் என்ற அசைன்மெண்டும் அவருக்கு வழங்கப்பட்டது.
இந்த நிலையில் தான் தமிழக அரசுக்கு தமிழக பாஜக கடும் நெருக்கடியை பல விஷயங்களில் வழங்கி வருகிறது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழி குழு குடியரசுத் தலைவரிடம் வழங்கிய பரிந்துரைகள் தொடர்பான தகவல்கள் ஊடகங்களில் கசிந்தது. அதில் இந்தி பேசும் மாநிலங்களில் இருக்கின்ற ஐஐடி கல் உள்ளிட்ட மத்திய கல்வி நிறுவனங்களில் இந்தியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்று பரிந்துரைகள் இருந்ததாக சொல்லப்படுகிறது.
இதனை கண்டிக்கும் விதமாக திமுகவின் இளைஞர் அணி மற்றும் மாணவரணி சார்பாக தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றது. அதோடு சமீபத்தில் கூடிய தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் மத்திய அரசின் இந்தி திணிப்புக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் திமுக அரசு தாய் மொழிக்கு முடிவுரை எழுத முயற்சி செய்வதாக தெரிவித்து பாஜக சார்பாக இன்று தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. கடலூரில் நடைபெறும் போராட்டத்தில் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.