ஆர் எஸ் எஸ் அமைப்புகள் காலுன்ற முடியாத நிலையில் ஊடகங்களில் வெறுப்பு பிரச்சாரத்தை உபயோகிக்கின்றனர் – அமைச்சர் மனோ தங்கராஜ்!!

Photo of author

By Savitha

தென் மாநிலங்களில் பாஜக ஆர் எஸ் எஸ் அமைப்புகள் காலூன்ற முடியாத நிலையில், ஊடகங்களை பயன்படுத்தி மக்களிடையே வெறுப்பு பிரச்சாரத்தை மேற்கொள்வதாக அமைச்சர் மனோ தங்கராஜ் குற்றச்சாட்டு.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலில் தமிழகத் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தென் மாநிலங்களில் பாஜக ஆர் எஸ் எஸ் அமைப்புகள் காலூன்ற முடியாத நிலையில், தி கேரளா ஸ்டோரி சினிமா போன்ற ஊடகங்களை பயன்படுத்தி மக்களிடையே வெறுப்பு பிரச்சாரத்தை மேற்கொள்வதாகவும் இது வன்மையாக கண்டிக்கத்தக்கது எனவும் கூறினார்.

ஊடகத்துறையில் ஏராளமான பணத்தை முதலீடு செய்து மக்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்தி தென் மாநிலங்களில் நுழைய முயற்சிப்பதாகவும் தங்கள் ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்துக் கொள்வதற்காக கோயபலஷ் பிரச்சாரத்தை மேற்கொள்ளதாகவும், குற்றம் சாற்றினார்.

நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் வரும் நிலையில் வடமாநிலங்களில் பிரச்சனையை ஏற்படுத்தி அரசியல் நடத்துவது போல தென்மாநிலங்களிலும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் ஒற்றை இலக்குக்காக இது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக கூறினார்.