கடந்த 23ஆம் தேதி அதிகாலை கோவை உக்கடம் பகுதியில் கார் சிலிண்டர் வெடி விபத்து உண்டானது.
இந்த விபத்தில் அந்த காரில் இருந்த ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார். அதோடு அவருக்கு ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருந்ததாகவும் அவர் தேசிய புலனாய்வு முகமையின் கண்காணிப்பில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும் கோவையில் கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற உள் நோக்கத்துடன் அவர் தற்கொலை படை தாக்குதல் நடத்திருக்கலாம் என்றும் காவல்துறையினரால் சந்தேகிக்கப்பட்டது.
இது தொடர்பாக ஆறு பேரை உபா சட்டத்தின் கீழ் கைது செய்து காவல்துறையினர் விசாரித்தனர். இந்த கார் வெடி விபத்து வழக்கை தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றி தமிழக அரசு பரிந்துரை செய்தது. இந்த நிலையில் கோவை வெடி விபத்து குறித்து பாஜக மற்றும் தமிழக அரசுகளையே தொடர்ந்து கருத்து மோதல்கள் ஏற்பட்டு வருகிறது.
இதற்கு முன்னதாகவே கோவையில் பாஜகவின் நிர்வாகி இல்லம் மற்றும் பாஜகவின் அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் பெட்ரோல் குண்டு வச்சு சம்பவங்கள் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
அதோடு தீவிரவாத அமைப்புடன் தொடர்பு உள்ளவர்களை தமிழக அரசு கண்டுகொள்ளாமல் விட்டதாக புகார் எழுந்தது இதற்கு தமிழக காவல்துறை பதிலளித்தது இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் தமிழக காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபுவை கடுமையாக விமர்சனம் செய்த அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
இந்த நிலையில் கோவை கார் வண்டி விபத்து நடைபெற்ற கோவை உக்கடம் பகுதியில் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை அந்த மாவட்ட நிர்வாகிகளுடன் சென்று பார்வையிட்டார். இதனை தொடர்ந்து அங்கே இருக்கக்கூடிய கோட்டை ஈஸ்வரன் கோவிலில் சாமி தரிசனமும் செய்தார்.
கார் வெடி விபத்து நடைபெற்ற பகுதிக்கு அண்ணாமலை வருவதை முன்னிட்டு அந்தப் பகுதி முழுவதும் காவல்துறையினரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. கோவிலை சுற்றி உள்ள அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது.