கூட்டுறவு சங்க தேர்தல் முறையாக நடத்தவில்லை என்றால் எங்கள் ஆளுநர் விடமாட்டார் – என பிஜேபி மாநில துணைத் தலைவர் கே பி ராமலிங்கம்!!

Photo of author

By Rupa

கூட்டுறவு சங்க தேர்தல் முறையாக நடத்தவில்லை என்றால் எங்கள் ஆளுநர் விடமாட்டார் – என பிஜேபி மாநில துணைத் தலைவர் கே பி ராமலிங்கம்!!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள வேலகவுண்டனூர் பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சேலம் மண்டல ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவர் கே பி ராமலிங்கம் வி பி துரைசாமி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

இதில் சேலம் கிருஷ்ணகிரி தர்மபுரி நாமக்கல் கரூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர் இந்த கூட்டத்தில் பேசிய பாரதிய ஜனதா கட்சியில் மாநில துணைத் தலைவரும் முன்னாள் எம் பீி யுமான கே பி ராமலிங்கம் பேசும் பொழுது கடந்த இரண்டு முறையாக பாரதிய ஜனதா கட்சி பிரதமர் மோடி தலைமையில் நாட்டை ஆண்டு வருகிறது.

அடுத்து 2024 ல் வரும் தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சியை அமைக்கும் எனவும் திமுக அதிமுக இருவரும் ஆண்ட கட்சிகள் இரண்டு கட்சிகளும் ஒருவர் மீது ஒருவர் அவர்கள் செய்த தவறுகளை சுட்டிக்காட்டி வருகின்றனர்.

எந்த வித ஊழலும் இல்லாமல் நேர்மையான கட்சி இந்திய துணை கண்டத்தில் ஒரு கட்சி இருக்குமேயானால் அது பாரதிய ஜனதா கட்சி தான் எனவே அடுத்து வரும் தேர்தலில் இந்தியாவில் 400 இடங்களையும் தமிழகத்தில் குறைந்தது 35 பாராளுமன்ற தொகுதிகளை கைப்பற்றுவோம்.

அமித்ஷா தற்போது மத்திய கூட்டுறவு அமைச்சராக உள்ளார்.தமிழகத்தில் இன்னும் ஒரு மாத காலத்திற்குள் கூட்டுறவு சங்க தேர்தல் நடைபெற உள்ளது.

இதில் பல பதவிகளை பிடித்து விடலாம் என திமுகவினர் கனவு கண்டு கொண்டு உள்ளனர் நேர்மையாக தேர்தல் நடக்கவில்லை என்றால் எங்கள் ஆளுநர் விடமாட்டார்.

எனவே பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் அதிக அளவில் கூட்டுறவு சங்கத்தில் வெற்றி பெற வாய்ப்புள்ளது என பேசினார் இதில் சேலம் மண்டலம் உள்ளடக்கிய ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.