பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று பாஜகவின் நாடாளுமன்ற குழு கூட்டம்! கட்சியின் எம்பிக்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு!

Photo of author

By Sakthi

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கிய போது கடந்த 7ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக நாடாளுமன்ற குழு கூட்டம் நடைபெற்றது. நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் வருகை தொடர்பாக கவலை தெரிவித்த அவர் நாடாளுமன்றத்திற்கு வருகை தராத உறுப்பினர்கள் தங்களுடைய நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கை செய்தார்.

இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது இந்த நிலையில், எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி நாடாளுமன்றத்தை தொடர்ந்து நடைபெற விடாமல் முடக்கி வைத்து வருகின்றன. இதனால் மத்திய அரசின் அலுவல் பணிகள் பலவும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். பல சட்ட மசோதாக்களை நிறைவேற்ற முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.

இதனைத் தொடர்ந்து மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷியிடம் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.

இந்த சூழ்நிலையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரின் கடைசி வாரத்தில் பாஜக தன்னுடைய நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தை இன்று நடத்த இருக்கிறது. முன்னதாக மக்களவை மற்றும் மாநிலங்களவையில் இருக்கின்ற அனைத்து பாஜக உறுப்பினர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்ஒத்திருக்கிறது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் மாதம் 21ஆம் தேதியுடன் நிறைவு பெற இருக்கிறது. அதாவது நாளை மறுநாள் உடன் குளிர்கால கூட்டத் தொடர் முழுமையாக நிறைவு பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.