திமுகவிற்கு எதிராக CAAக்கு ஆதரவாக செயல்பட நினைத்து அசிங்கப்பட்ட பாஜக
மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்த வண்ணமே உள்ளன. குறிப்பாக தமிழகத்தில் திமுக தலைமையில் அதன் கூட்டணி கட்சிகள் இணைந்து இந்த போராட்டத்தைப் எதிர்த்துப் பேரணி நடத்தினர்.
இதனையடுத்து சில நாட்களுக்கு முன்பு சென்னையில் CAA சட்டத்தை எதிர்த்து பொது வெளியில் கோலம் போட்டு போராடிய பெண்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நினைத்த திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் கனிமொழி உள்ளிட்டோர் தங்களது வீடுகளின் முன் இந்த சட்டத்திற்கு எதிராக கோலமிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.
தலைமையின் கட்டளைப் படி திமுக தொண்டர்களும் CAA சட்டத்தை எதிர்த்து தங்கள் வீடுகளின் முன் கோலமிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு எதிராக பாஜக மற்றும் பாமக உள்ளிட்ட கட்சி தொண்டர்கள் திமுகவிற்கு எதிராக மூலப் பத்திரம் எங்கே என்றும் தங்களது வீடுகளின் முன் கோலமிட்டு திமுகவை விமர்சிக்க தொடங்கினர்.
இந்நிலையில் தான் அடுத்த கட்டமாக சமூக வலைதளமான டிவிட்டரில் பாஜக ஆதரவாளர்கள் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக கருத்து தெரிவிப்பதாக நினைத்து, எழுத்துப் பிழைகொண்ட ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
தற்போது குடியுரிமை திருத்தச் சட்டம் CAA வுக்கு பதிலா CCA எனக் குறிப்பிட்டு ட்ரண்ட் செய்துள்ளனர்.
பாஜக தலைமையிலான மோடி அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் எதிர்க் கட்சிகளை சேர்ந்தவர்கள் தங்களின் கருத்துகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
குறிப்பாக பாஜக கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்திற்கு எதிராகவும், மோடி அரசுக்கு எதிராகவும் ட்விட்டரில் தினமும் ஏதாவது ஒரு ஹேஷ்டேக் டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பாஜக ஆதரவாளர்கள் மூலமும் அவ்வப்போது ஹேஷ்டேக்குகள் ட்ரெண்ட் செய்யப்பட்டன.
அந்த வகையில் தற்போது, பாஜக அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக #IndiaSupportsCAA ஹேஷ்டேக்கிற்கு பதில் #IndiaSupportsCCA என்ற ஹேஷ்டேக்கை தவறாக பாஜக தரப்பினர் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
பணம் செலவும் செய்து தகவல் தொழில்நுட்ப அணியை நடத்தி வரும் திமுகவிற்கு இணையாக தமிழகத்தில் தகவல் தொழில்நுட்ப அணியை பாஜக வைத்துள்ளது என்று எண்ணிய நிலையில் ஹேஷ் டேக்கில் உள்ள எழுத்துப் பிழையைக் கூட கவனிக்காமல், அப்படியே சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளது அக்கட்சியினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
#IndiaSupportsCAA #IndiaSupportsCCA