ADMK BJP: பாஜக மக்களவைத் தேர்தலின் போது அதிமுகவை பின்னுக்கு தள்ளி ஒரு சில தொகுதிகளில் இரண்டாம் இடத்தை பிடித்தது. தற்போது மக்களவை தேர்தலுக்காக மீண்டும் அதிமுக மற்றும் பாஜக இணைந்துள்ளது. ஆனால் இம்முறை அதிமுகவை வைத்து பாஜக ஆட்டத்தை ஆட வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளனர். அந்த காரணத்தினால் தான் கூட்டணி முறையில் ஆட்சி என அமித்ஷா கூறி வருகிறார்.
அதிமுகவுடன் இணைந்து தேர்தலில் வெற்றி பெற்று விட்டு எடப்பாடியை பொம்மை முதலமைச்சராக மாற்றிவிட வேண்டும் என்பதுதான் அவர்களின் திட்டம். ஆனால் எடப்பாடி இருக்கு ஒரு போதும் இதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. அதேபோல எடப்பாடி கூட்டணியில் இணையும் போது டிடிவி தினகரன் சசிகலா ஓபிஎஸ் என யாரையும் நான் சேர்த்துக் கொள்ள மாட்டேன் என்ற டீலிங்-கையும் வைத்தார்.
ஆனால் ஆரம்ப கட்டத்தில் இவர்களை ஒதுக்குவது போல் காட்டிவிட்டு தற்போது எங்களது கூட்டணியில் இவர்கள் அனைவரும் உள்ளனர் எனக் கூறுகின்றனர். அதிலும் தேசிய ஜனநாயக கூட்டணியை விட்டு வெளியேறிய ஓபிஎஸ்-க்கு மீண்டும் கட்சியில் இணைந்து கொள்ளும்படி அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இது ஒரு புறம் இருக்க மற்றொரு பக்கம் சசிகலா ஒன்றிணைந்த அதிமுகவால் தான் வெற்றி பெற முடியும் எனக் கூறியுள்ளார்.
இவையனைத்தையும் வைத்து பார்க்கையில் எடப்பாடி-யை மறைமுகமாக சுற்றி வலைக்க பாஜக ஒவ்வொரு காயாக நகர்த்தி வருகிறது. இதனால் கூட்டணியில் பிளவு உண்டாகும் என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.