
ADMK BJP: அதிமுக பாஜக கூட்டணி வைத்தது தற்போது எடப்பாடிக்கு மிகவும் சவாலாக உள்ளது. ஆரம்ப கட்டத்தில் கூட்டணி வைப்பதற்கான பல ஒப்பந்தங்கள் போடப்பட்டிருந்தாலும் அதன் எல்லையை தாண்டி செல்கிறது. அதாவது தனது அதிமுக கட்சிக்குள் ஓபிஎஸ் சசிகலா தினகரன் உள்ளிட்டோரை இணைக்க கூடாது என எடப்பாடி கூறி இருந்தார். அது ரீதியாக என்னிடம் வற்புறுத்தவும் கூடாது என தெரிவித்திருந்தார்.
ஆனால் பாஜக நிர்வாகிகள் சமீபத்தில் அளிக்கும் பேட்டியில், கூடிய விரைவில் டிடிவி தினகரன் இணைவார், இது ரீதியாக எடப்பாடியே கூறுவார் என தெரிவித்துள்ளனர். இப்படி அதிமுகவின் தலையீடு இல்லாமல் பாஜக முடிவு எடுப்பது உச்சகட்ட கொந்தளிப்பை ஏற்படுத்துகிறது. அதேபோல கூட்டணி ஆட்சி முறைதான், அதிலும் பாஜக தான் அதன் செயல் தலைவர் என்பது போல் கூறி வருகின்றனர். இதனையும் எடப்பாடி முழுமையாக எதிர்த்துள்ளார்.
இவ்வாறு தனது கூட்டணி கோட்பாடுகளை உடைக்கும் பாஜகவுடன் நீண்ட நாள் பயணம் தொடர முடியுமா என்று குழப்பத்திலும் உள்ளார். இந்நிலையில் தான் அதிமுகவில் வேறு ஒரு தலைவரை நியமித்து நமது கைப்பிடிக்குள் கொண்டு வந்து விடலாம் என பாஜக மறைமுகத் திட்டம் தீட்டி வருகிறார்களாம். அந்த மறைமுக ஆலோசனையில் அதிமுகவின் மாற்று தலைவராக செங்கோட்டையன் அல்லது வேலுமணி இருக்கலாம் என கூறுகின்றனர்.
குறுகிய காலத்தில் செங்கோட்டையனுக்கும் எடப்பாடிக்கும் மோதல் போக்கு இருந்தது. நாளடைவில் அதிமுக பாஜக கூட்டணிக்கு பிறகு அப்படியே அமைதியாகிவிட்டது. இதற்கு முக்கிய காரணம், தனக்கு தலைவர் பதவி வரப்போகிறது என்பதுதான். எந்த ஒரு கண்டிஷனுக்கும் எடப்பாடி ஒத்துவரவில்லை என்றால் இவர்களில் ஒருவரை தலைவராக்கி தங்களது திட்டத்தை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று நினைக்கிறார்களாம்.
ஆனால் எடப்பாடி ஒருபோதும் அதற்கு இடம் கொடுக்க மாட்டார் என கூறுகின்றனர். இதுவே கட்சியிலிருந்து வெளியேறிய அன்வர் ராஜா சமீபத்தில் அளித்த பேட்டியில் கூட, 2026 தேர்தலுக்குப் பிறகு கட்டாயம் முதல்வர் வாய்ப்பானது செங்கோட்டையன் அல்லது வேலுமணிக்கு செல்லும் என்று குறிப்பிட்டிருந்தார். இது அமித்ஷாவே கூறியதாகவும் தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர் பேட்டியளித்ததும் அரசியல் களத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தி பல விமர்சனங்களுக்கு ஆளாக்கியது குறிப்பிடத்தக்கது.