அதிரப்போகும் அரசியல் மேடை.. விஜய் கூட்டணியில் ஐக்கியமாகும் தேமுதிக காங்கிரஸ்!! கலக்கத்தில் திமுக அதிமுக!!

0
826
BJP will give a big blow to EPS.. AIADMK leadership will change!! A secret project that will be revealed!!
BJP will give a big blow to EPS.. AIADMK leadership will change!! A secret project that will be revealed!!

TVK DMDK: தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை மாநகரில் நடைபெற உள்ளது. இந்த இரண்டாவது மாநாட்டில் பல்வேறு மாற்று கட்சி சேர்ந்த தலைவர்கள் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதில் முதலாவதாக காங்கிரஸின் ராகுல் காந்தி உள்ளார். இவர்களின் நட்புறவானது 15 வருடத்தை கடந்து தற்போது வரை நீட்டித்திருக்கிறது. இதற்கு ஒரு எடுத்துக்காட்டாக கூற வேண்டுமென்றால், வாக்காளர் பட்டியலில் திருத்தம் கொண்டு வருவதை எதிர்த்து ராகுல்காந்தி நடைப்பயணம் மேற்கொண்டார்.

அதனை தடுத்து நிறுத்திய போலீசார் அவரை கைது செய்தனர். இவ்வாறு அவரை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, விஜய் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இப்படி விஜய்யின் ஆதரவு எப்பொழுதும் ராகுல் காந்திக்கு இருந்து வருகிறது. அதனால் அவருக்கு மாநாட்டிற்கான அழைப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், கட்டாயம் அவர் கலந்து கொள்வதாக எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல தேமுதிக-விர்க்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம். எம் பி சீட் அதிமுக தராததால் கூட்டணி குறித்து வாய் திறக்காமல் இருக்கும் பிரேமலதா ஆட்சியில் பங்கு கொடுத்தால் சரி என்று நினைக்கிறாராம்.

அப்படி பார்க்கும்போது விஜய் தான் நமது கூட்டணிக்கு செட்டாகுவார் என  கட்சிக்குள் பேச்சு அடிபட்டு வருகிறது. அதேபோல விஜய் பிரபாகரனும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கிறோமா?? என்ற கேள்வி முனையிலேயே பேட்டி அளித்திருந்தார். இதையெல்லாம் வைத்துப் பார்க்கையில் விஜயகாந்த் இறப்பிற்கு பிறகு உறுதியான அரசியலை மக்களுக்கு கொண்டு சேர்க்க நினைக்கிறார்கள்.

அதற்கு விஜய் தான் சரிப்பட்டு வருவார் என்றும் கட்டாயம் மதுரையில் நடக்கப் போகும் மாநாட்டில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்சமயம் விஜய்க்கு மறைமுக ஆதரவாக காங்கிரஸ் தேமுதிக இருக்கும் எனக் கூறுகின்றனர். ஏனென்றால் கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்த போதும் இப்படி தான் டெல்லியிலிருந்து அரவிந்த் கெஜ்ரிவால் வருகை புரிந்திருந்தார். அதேபோல இவர்களது வருகையும் இருக்கும் என பனையூர் வட்டாரங்கள் பேசி வருகின்றனர்.

Previous articleEPS க்கு பாஜக கொடுக்கும் பெரும் அடி.. மாறப்போகும் அதிமுக தலைமை!! பிரட்டிப்போடும் ரகசிய திட்டம்!!
Next articleஇந்தியாவை நோக்கி வரும் 10 ஏவுகணைகள்.. பாகிஸ்தான் கொடுக்கும் மிரட்டல்!! அடிக்கபோகும் போர் மணி!!