2026 யில் பாஜக ஆட்சி தான்.. அதிக தொகுதிகளில் நாங்கள் தான் போட்டியிடுவோம்- அண்ணாமலை பரபர பேட்டி!!

0
16
BJP will rule in 2026.. we will contest in more constituencies- Annamalai Parapara interview!!
BJP will rule in 2026.. we will contest in more constituencies- Annamalai Parapara interview!!

ADMK BJP: அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்தாலும் தற்போது வரை அவர்களின் ஒப்பந்தம் குறித்து தெளிவு இல்லாத போல தான் உள்ளது. எடப்பாடி தரப்பினர் நாங்கள் பாஜகவுடன் கூட்டணி தான் வைத்துள்ளோம் ஆனால் அவர்களுடன் கூட்டணி ஆட்சி நடத்த மாட்டோம் என்று கூறி வருகின்றனர். ஆனால் மத்திய மந்திரி முதல் தமிழக பாஜக மாநில தலைவர் வரை அதிமுக பாஜக தலைமையில் கூட்டணி ஆட்சி தமிழ்நாட்டில் நடக்கும் என்கின்றனர். இதனின் கஉச்சகட்டமாக தற்போது தமிழகத்திற்கு மத்திய மந்திரி அமித்ஷா வருகை புரிந்த போது இது ரீதியாக பேசியிருந்தார்.

அச்சமயம் அதிமுக தொண்டர் மற்றும் நிர்வாகிகளிடையே பெரும் குழப்பம் எழ ஆரம்பித்தது. இதனை தவிர்க்கும் வகையில் மீண்டும் எடப்பாடி அதிமுக ஆட்சி தான் என்று பாஜக கூறியதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் பேசி வருகிறார். ஆனால் இந்நிலையில் மீண்டும் பாஜக அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில், பாஜக கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் தற்போது வரை செய்து காட்டுகிறது. இதுவே திமுக வந்து நான்காண்டுகள் ஆகிறது.

குறைந்தபட்சம் 50 வாக்குறுதிகளை கூட நிறைவேற்ற முடியவில்லை. அவர்கள் சொன்ன சிலிண்டருக்கு ரூ 100 மானியம் எனத் தொடங்கி பெட்ரோல் டீசல் வரை எதுவும் குறைக்கப்படவில்லை. ஆனால் மோடி சொன்னதை தாண்டி செய்து வருகிறார். அதாவது பெட்ரோல் டீசல் விலையை குறைப்பதாக கூறவில்லை, மாறாக குறைத்துள்ளார். அண்ணாமலை மோடிக்கு அதிமுக விடும் அதிக தொகுதி வேண்டும் என்று கேட்டு கடிதம் எழுதியதாக ஒரு தகவல் பரவியது.

அதற்கு இல்லை என்று பதில் அளித்துள்ளார். அதேபோல 2026 யில் கூட்டணி ஆட்சி என்று சொல்ல மாட்டேன் அது பாஜக ஆட்சி தான் எனக்கு கூறியுள்ளார். தேர்தல் வரும் சமயத்தில் கூட்டணி கட்சித் தலைவர்கள் இருவரும் இணைந்து தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும். பாஜகவில் இருக்கும் நான் அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று தான் என்னுடைய கட்சி வளர்க்க தான் எனது எண்ணம் இருக்குமே தவிர இதர கட்சிகளை வளர்ப்பதில் இல்லை என்று சூசகமாக சொல்லி முடித்துள்ளார்.

Previous articleஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு; லேட் பண்ணாம விண்ணப்பியுங்கள்!
Next articleமாணவர்கள் இனி ஜாலியா ஸ்கூல் போகலாம்; புதிய வசதியை அறிமுகம் செய்த அரசு!