₹200 கூலினாலும் ஒரு நியாயம் வேணாமாடா? திமுக உடன்பிறப்புகளை கதறவிடும் பாஜக நிர்வாகி
பாஜக தலைமையிலான மதிய அரசு மக்களவையில் கொண்டு வந்த குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை அதன் கூட்டணி கட்சியான அதிமுக நீங்கலாகத் தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ், திமுக, விடுதலை சிறுத்தைகள், சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட பிற கட்சி உறுப்பினர்கள் அனைவரும் எதிர்த்துள்ளனர். மேலும் எதிர்ப்பு தெரிவித்துடன் வெளிநடப்பு செய்து விட்டதாகவும் இந்த மசோதாவை எதிர்த்து திமுக எம்பிக்கள் வாக்களிக்கவில்லை என்றும் அதன் கூட்டணி கட்சிகளே விமர்சனம் செய்து வருகின்றன.
இந்நிலையில் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துப் பேசிய திமுகவை சேர்ந்த சென்னை மத்திய சென்னை தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் கூறியதாவது, இந்தியாவின் தெற்கும், வடக்கும் ஒரே மாதிரி சிந்திக்காது என்றார்.
இந்த சட்டத் திருத்த மசோதாவானது அரசமைப்பு சட்ட முகப்புரைக்கே எதிரானது என்றும் அவர் அப்போது குறிப்பிட்டார்.
மேலும் பேசிய அவர் உள்துறை அமைச்சர் தங்களுக்குப் பெரும்பான்மை இருப்பதாக, மக்கள் அதிகாரத்தை வழங்கி இருப்பதாகக் குறிப்பிட்டார். ஆனால், என் மாநிலத்தை சேர்ந்தவர்கள் உங்களுக்கு வாக்களிக்கவில்லை, வெல்ல வைக்கவில்லை என்று கூறிய அவர் நீங்கள் சிறுபான்மை மக்களின் நம்பிக்கையைப் பெற நீங்கள் தவறவிட்டுவீட்டீர்கள் என்றும் விமர்சனம் செய்திருந்தார்.
நீங்கள் வட மாநிலங்களுக்கு மட்டுமான உள்துறை அமைச்சர் இல்லை. ஒட்டு மொத்தமான இந்தியாவுக்குமான உள்துறை அமைச்சர். உங்கள் எண்ணங்களில் பாகிஸ்தான், வங்கதேசம் மட்டுமே வியாபித்திருக்கிறது. இலங்கை, மாலத்தீவும் நம் அண்டை நாடுகள்தான். பாகிஸ்தானிலிருந்து வருபவர்களுக்குக் குடியுரிமை வழங்குகிறீர்கள். இலங்கையிலிருந்து வருபவர்களுக்குத் தர மறுக்கிறீர்கள். முப்பது ஆண்டுகளாக இலங்கை மக்கள் இந்தியாவில் உள்ள அகதிகள் முகாமில் இருக்கிறார்கள். அவர்களுக்கு என்ன செய்யப் போகிறீர்கள்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
மாலத்தீவிலும் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் வசிக்கிறார்கள். அவர்கள் இந்தியா குடியுரிமை பெற விரும்பினால் அவர்களுக்கு என்ன செய்யப் போகிறீர்கள்? அங்குள்ள இஸ்லாமியர்கள் குறித்த உங்கள் நிலைப்பாடு என்ன? இந்தியாவை மதரீதியாக நீங்கள் துண்டாடுகிறீர்கள். சிறுபான்மையினர் இடையே கூட நீங்கள் பிரிவினையை ஏற்படுத்த நினைக்கிறீர்கள். பாகிஸ்தான் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள காஷ்மீர் இஸ்லாமியர்கள் இந்தியா வர விரும்பினால், கடவுள் நம்பிக்கையற்றவர்கள் வர விரும்பினால், அதற்கு உங்கள் பதில் என்ன? என்ற கேள்வியையும் அவர் முன் வைத்தார்.
பிரதமர் மோடி யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று ஐ.நா சபையில் பேசுகிறார். ஆனால், உள்துறை அமைச்சரே மோடியின் சொற்படி நடக்கவில்லை. இருபது கோடி இஸ்லாமியர்கள் இந்தியாவில் வசிக்கிறார்கள். ஆனால், அவர்கள் 2014 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து ஒரு அச்சத்திலேயே இருக்கிறார்கள். வலதுசாரி அரசு பொறுப்பேற்றதிலிருந்து பசுவின் பேரால் அவர்கள் கும்பல் கொலை செய்யப்படுகிறார்கள். நீங்கள் அவர்களை அச்சப்படுத்துகிறீர்கள். இந்த அரசு இஸ்லாமியர்களுக்கு எதிரானது என நம்பப்படுகிறது. இப்போது இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக இருக்கிறது இந்த மசோதா என்றும் அவர் பேசியுள்ளார்.
இவ்வாறு திமுக எம்.பி. தயாநிதிமாறன் இந்த குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து பேசியதை திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்தவர்கள் பெருமையாக விளம்பரபடுத்தி வரும் நிலையில் பாஜக இளைஞர் அணி துணைத் தலைவர் எஸ்.ஜி.சூர்யா அவர்களின செயல்களை கடுமையாக விமர்சித்துள்ளார். திமுக கழக உடன்பிறப்புகளை விமர்சித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது.
அட முட்டா உ.பிஸ். இது போல அடிப்படை அறிவு இல்லாம பொங்குனதயா தயாநிதி மாறன் பாராளமன்றத்துல அமித் ஷாவ கிழிச்சி தொங்கவிட்டார்னு பில்டப் குடுத்துட்டு இருக்கீங்க. டேய், ₹200 கூலினாலும் ஒரு நியாயம் வேணாமா டா?
உங்களுக்கெல்லாம் கடைசி வரைக்கும் மு.க.ஸ்டாலின் தான். என்றும் அவர் அதில் கடுமையாக விமர்சனம் செய்து பதிவிட்டுள்ளார்.