இரண்டே பெட்டிகள் கொண்ட ரயில்: இலவச சேவை என்பதால் குவியும் பயணிகள்

0
76

இரண்டே பெட்டிகள் கொண்ட ரயில்: இலவச சேவை என்பதால் குவியும் பயணிகள்

ஒவ்வொரு ரயிலும் குறைந்தபட்சம் 10 முதல் 12 ரயில் பெட்டிகள் இருக்கும் என்ற நிலையில் சீனாவில் முற்றிலும் புதுமையாக இரண்டே இரண்டு ரயில் பெட்டிகள் கொண்ட சிறிய ரயில் சேவை ஒன்று சமீபத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த சேவைக்கு பொதுமக்களிடம் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளதாக சீன ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

சீனாவிலுள்ள தைபா என்ற பகுதியிலிருந்து மக்கா என்ற பகுதிக்கு இந்த ரயில்சேவை முதல்கட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 9.3 கிலோமீட்டர் மட்டுமே தூரம் கொண்ட இந்த வழித்தடத்தில் 11 நிறுத்தங்கள் உள்ளதாகவும் இந்த வழித்தடத்தில் அதிக குடியிருப்புகள் மற்றும் சுற்றுலா தளங்கள் இருப்பதாகவும் அதனால் பயணிகளின் மாபெரும் வரவேற்பை இந்த சிறிய ரயில் சேவை பெற்றதாகவும் அங்கு உள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் அறிமுக சலுகையாக ஒரு மாதத்திற்கு இந்த ரயிலில் இலவச பயணம் செய்யலாம் என சீன ரயில்வே துறை அறிவித்துள்ளதால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து மிகுந்த ஆர்வத்துடன் இந்த ரயிலில் பயணம் செய்து வருகின்றனர். தினமும் சுமார் 20 ஆயிரம் பேர் இந்த இரண்டு பெட்டிகளில் பயணம் செய்யும் வகையில் திட்டமிட்டு உள்ளதாகவும் இந்த ரயில்சேவை பொதுமக்களின் பாராட்டுகளைப் பெற்றால் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்றும் சீன ரயில்வே துறை தெரிவித்துள்ளது.அதிக ரயில் பெட்டிகள் கொண்ட ரயிலில் ஒரு சில நேரங்களில் சில பெட்டிகள் காலியாக இருப்பதாகவும், எனவே தான் இரண்டு பெட்டிகள் கொண்ட ரயில்கள் அதிகமாக இயக்க திட்டமிட்டுள்ளதாகவும் சீன ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

author avatar
CineDesk