பாஜகவின் சி டீம் தவெக!! விஜய் பேச்சு- பதிலடி கொடுத்த திமுக!!

Photo of author

By Rupa

பாஜகவின் சி டீம் தவெக!! விஜய் பேச்சு- பதிலடி கொடுத்த திமுக!!

Rupa

BJP's C team is hot!! Vijay speech- DMK responded!!

தவெக மாநில மாநாடு  நேற்று  விக்கிரவாண்டியில் நடைபெற்றது.  அப்போது மாநாட்டில் பேசிய  தவெக தலைவர் விஜய்,   திராவிட மாடல் -னு சொல்லிக்கிட்டு தந்தை பெரியார், அண்ணாவின் பெயரை வைத்து  தமிழ்நாட்டை சொரண்டி கொல்லையாடிக்கற குடும்ப சுயநல  கூட்டம் தான் நம்மளோட  அடுத்த அரசியல் முதல் எதிரி, என்று பேசி இருந்தார் விஜய். இந்த நிலையில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய திமுக அமைச்சர் ரகுபதி, விஜய் பேச்சுக்கு பதில் அளிக்கும் வகையில் பேசியிருந்தார்.

அதில்  திராவிட மாடல் கொள்கைகளை தமிழக மக்கள் இடத்தில் இருந்து பிரிக்க முடியாது. என்றும், முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் இரவு பகலாக அதற்கு உழைத்து இருக்கிறார்.  மேலும் தவெக மாநாட்டில் விஜய் திராவிட மாடல்  எதிர்ப்பு தொடர்பாக பேசியதற்கு, பதில் அளிக்கும் வகையில், பாஜகவின் எ டீ ம், பி டீம் பார்த்து இருக்கிறோம் இது சி டீம், என்றும்  அதிமுகவை எதிர்த்து பேசினால் அரசியல் எடுபடாது என்பதால் திமுகவை எதிர்த்து பேசியுள்ளார்.

அதிமுகவின் வாக்குகளை ஈர்ப்பதற்காக, அதிமுகவை பற்றி  பேசி வில்லை, மேலும் அதிமுக தொண்டர்களை பிரிப்பதே விஜய்யின் குறிக்கோள் என்றும், மேலும் ஆளுநரை எதிர்த்து பேசினால் தான் தமிழகத்தில்  அரசியல் எடுபடும், திமுக அரசு சிறுபான்மையினர் நலன் கொள்கைக்காக 2 இரண்டு முறை ஆட்சி இழந்து இருக்கிறது.  என்று  அமைச்சர் ரகுபதி கூறினார்.