பாஜக முக்கிய புள்ளி அதிமுகவில் ஐக்கியம் !! தொடரும் தமிழக பாஜகவின் சரிவு!!

Photo of author

By Vijay

பாஜக முக்கிய புள்ளி அதிமுகவில் ஐக்கியம் !! தொடரும் தமிழக பாஜகவின் சரிவு!!

தமிழகத்தில் கடந்த மாதம் நடைபெற்ற ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக தோற்றதை அடுத்து அதன் கூட்டணி கட்சியான பாஜக மீது தங்களது தோல்விக்கு அவர்களுடன் கூட்டணி வைத்தது காரணம் என அதிமுக தலைகள் கூறிவந்த நிலையில், பாஜகவும் தங்கள் பங்கிற்கு அதிமுகவை கடுமையாக சாடிவந்தது.

 

இப்படி அதிமுக பாஜக இடையே கொழுந்து விட்டு எரிந்த வார்த்தை போர்கள் அதன் தலைவர் அண்ணாமலையின் பேச்சு எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போல ஆகியது, மேலும் குறித்து அண்ணாமலை பேசும்போது அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் எனவும் நான்கைந்து சீட்டிற்காக கூண்டில் எத்தனை நாள் அடைபட்டு கிடப்பது என கூறியது அதிமுகவில் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

 

அண்ணாமலையின் இந்த பேச்சுக்கு விரைவில் அவருக்கு அறுவடை கிடைக்கப்பெற்றது, அவரது நம்பிக்கை கூறிய கட்சியின் சில முக்கிய புள்ளிகள் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர். இதனையும் கடுமையாக விமர்சித்த அண்ணாமலை, டெல்லி சென்று வந்த பின் கூட்டணி குறித்து மேலிடம் பேசும் என்றார். இதனிடையே நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாஜக தேசிய தலைவர் அமித்ஷா அதிமுக மற்றும் பாஜக கூட்டணி வலுவாக உள்ளது என்றும் கூட்டணி பற்றி உறுதிபட தெரிவித்தார்.

 

இதனிடையே நேற்று சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி அதிமுக பாஜகவுடன் தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் உள்ளது என நேற்று கூறிய நிலையில், பாஜகவின் மாநில கல்வி பிரிவு செயலாளர் பொன்.கந்தசாமி இன்று காலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தன்னை அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக இணைத்து கொண்டார்.

ஒருபுறம் அதிமுக பாஜக கூட்டணி உறுதியாக உள்ளது என கூறிவரும் நிலையில் பாஜகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் அதிமுகவில் சேர்ந்து வருவது தமிழக பாஜக மட்டுமல்ல அகில இந்திய பாஜக தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர், அண்ணாமலையின் நடவடிக்கையால் ஒவ்வொரு நிர்வாகியாக கட்சியை விட்டு வெளியேறுவது தொடர்கதையாக உள்ளது, இதனை அடுத்து என்ன செய்யப்போகிறார் அண்ணாமலை என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியல் உலாவருகிறது.