உச்சகட்டத்தை தொட்டது பாஜகவின் ரவுடிசம்! ஒன்றிய அரசால் தொடரும் விவசாயிகளின் பலி எண்ணிக்கை!

Photo of author

By Rupa

உச்சகட்டத்தை தொட்டது பாஜகவின் ரவுடிசம்! ஒன்றிய அரசால் தொடரும் விவசாயிகளின் பலி எண்ணிக்கை!

Rupa

Updated on:

BJP's rhetoric reaches its climax! Will their game end?

உச்சகட்டத்தை தொட்டது பாஜகவின் ரவுடிசம்! ஒன்றிய அரசால் தொடரும் விவசாயிகளின் பலி எண்ணிக்கை!

விவசாயிகள் ,ஒன்றிய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து தொடர்ந்து போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.அந்த வகையில் நாடு தழுவிய முழு கடைகள் அடைப்பு போராட்டம் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஆந்திரா, பஞ்சாப் போன்ற மாநிலங்கள் முழு வீச்சில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து இச்சட்டத்தை எதிர்த்து உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். லக்கிம்பூர் கோரி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளும் இந்த போராட்டத்தில் முழுவீச்சுடன் பங்கேற்றுள்ளனர். நேற்று இந்த கிராமத்தில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் மாநில துணை முதல்வர் மந்திரி கேசவ பிரசாத் மவுரியா வருவதாக கூறியிருந்தனர்.

இவர் வருவதை எதிர்த்து அவரை தடுக்கும் விதமாக அருகில் இருக்கும் கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர் திகுணியாவில் குவிந்தனர். அப்பொழுது அந்த கிராமத்தில் அவ்வழியே பாஜகவினர் வாகனங்கள் அணிகளாக வந்தது. அவ்வாறு  வந்த ஒரு கார் அங்குள்ள விவசாயிகள் மீது மோதியது.அதில் இரு விவசாயிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆத்திரமடைந்த விவசாயிகள் ,பாஜக வந்த வாகனங்களை அடித்து நொறுக்கினர். இதனால் அப்பகுதி முழுவதும் வன்முறையாக காட்சி அளித்தது.

வன்முறையில் நான்கு விவசாயிகள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். இவ்வாறு ஒன்றிய அரசின் அராஜகத்தால் உயிர்களை இழந்த விவசாயிகளை கண்டு உத்தர பிரதேச மக்கள் பெரும் சோகத்தில் உள்ளனர். அதனையடுத்து வன்முறையால் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களை காண பிரியங்கா காந்தி சென்றார்.

அப்போது அவரை ஊருக்குள் நுழைய விடாமல் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் பிரியங்கா காந்தி கூறியது, ஒன்றிய அரசால் விவசாயிகள் வாட்டி வதைக்க படுவது தொடங்கு வண்ணமாகவே தான் இருக்கிறது. இதுபற்றி பேச வார்த்தைகளே இல்லை. இந்தியா, விவசாயிகளின் நாடு என்பதை மறந்துவிட்டு ஒன்றிய அரசு அவர்களை தொடர்ந்து வஞ்சித்து வருவதாக குற்றம்சாட்டினார்.