50 ஆண்டு காலங்களாக தமிழகத்தை ஆட்சி செய்த திராவிட அரசியல், தமிழுக்காக இதுவரை என்ன செய்துள்ளது என்று புதிதாக பாஜகவில் இணைந்த முன்னாள் ஐபிஎஸ் அண்ணாமலை விமர்சித்துப் பேசியுள்ளார்.
புதிதாக பாஜகவில் இணைந்தள்ள முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை, கோவை சித்தாபுதூரில் உள்ள பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் சந்தித்துப் பேசினார்.
அதில், “தமிழகத்தின் முன்னேற்றம் பற்றிய சிந்தனையாக தான் எனது அரசியல் இருக்கும் எனவும், நான் பாஜகவில் இணைந்தது பெருமையாக உள்ளது எனவும்,
தேர்தலில் எந்த இடத்தில் தலைமை போட்டியிட சொன்னாலும் தயாராக இருக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் ஜிஎஸ்டி, காஷ்மீர் பிரச்சனை, காவிரி நதிநீர் பங்கீடு போன்ற சாதனைகளை பாஜக அரசு செய்துள்ளது என குறிப்பிட்டு பேசினார்.
பாஜகவின் புதிய கல்விக் கொள்கை திட்டத்தில் இந்தித்திணிப்பு தற்போது இல்லை எனவும், புதிய கல்விக் கொள்கை திட்டம் தமிழகத்திற்கு நல்ல வழியினை காட்டி இளைஞர்களை வழி நடத்திச் செல்லும் எனவும் கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து பேசிய அவர், தமிழக அரசால் தற்போது நீட் தேர்வு நடத்த முடியும் எனவும் கூறியுள்ளார். மேலும், திராவிட கட்சிகள் ஆட்சி செய்து இதுவரை தமிழுக்காக என்ன செய்துள்ளது என்ற வெள்ளை அறிக்கையினை வெளியிட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தை மாற்று பாதையில் கொண்டு செல்வதில் எந்த மாற்றமும் இல்லை. இந்தத் திராவிடக் கட்சிகள் தமிழகத்தில் நல்ல முறையில் பொருளாதாரத்தை கையாள்வதில் இருந்து தவறிவிட்டது என விமர்சித்துப் பேசியுள்ளார்.