கருப்பு மற்றும் வெள்ளை தொற்றை தொடர்ந்து புதிதாக ஒன்று! மருத்துவர்கள் எச்சரிக்கை!

Photo of author

By Hasini

கருப்பு மற்றும் வெள்ளை தொற்றை தொடர்ந்து புதிதாக ஒன்று! மருத்துவர்கள் எச்சரிக்கை!

நம் நாட்டில் கொரோனாவின் இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில் அதிக வீரியமிக்க மருந்துகளை எடுத்து கொள்வோருக்கு அல்லது கொரோனா குணமானவருக்கு என சிலருக்கு கருப்பு பூஞ்சை நோய் அறிகுறி காணப்பட்டது.

இது நாளடைவில் வளர்ந்து நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளோரை பாதிக்கின்றது என கூறி வந்த நிலையில் அது தற்போது 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளது.

அதனை தொடர்ந்து உத்தர் பிரதேசம் மற்றும் டெல்லி போன்ற இடத்தில் வெள்ளை பூஞ்சை தொற்று பரவ ஆறம்பித்தது.இது கருப்பு பூஞ்சையை விட ஆபத்தானது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

தற்போது காசியாபாத்தில் ஒருவருக்கு மஞ்சள் பூஞ்சை நோய் காணப்படுகிறது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.மேலும் மஞ்சள் பூஞ்சை நோயானது வெள்ளை பூன்சையை விட அதிகளவு பாதிப்புகளை ஏற்படுத்தும் எனவும், இது உள்உறுப்புகளை பயங்கரமாக பாதிக்கின்றது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் இது உள்உறுப்புகளில் உட்புறமாக பரவுகிறது.உறுப்புகளில் சீழகசிவை ஏற்படுத்துகிறது.மேலும் இது உறுப்புகளை செயல் இழக்க வழிவகை செய்கிறது.

அதிக அளவு ஸ்டீராய்டுகளை எடுத்துக்கொள்வது, சுற்றுப்புறத் தூய்மையின்மை, சீரற்ற ஆக்சிஜன் பயன்பாடு போன்றவையே பூஞ்சை தொற்றுக்கு காரணம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.,