48 வயதில் பலத்த வரவேற்பு பெற்ற ப்ளாக் ப்யூட்டி! இதை யார் கொடுத்தார்கள் தெரியுமா?

0
161
Black Beauty, 48, has been a huge hit! Do you know who gave this?
Black Beauty, 48, has been a huge hit! Do you know who gave this?

48 வயதில் பலத்த வரவேற்பு பெற்ற ப்ளாக் ப்யூட்டி! இதை யார் கொடுத்தார்கள் தெரியுமா?

கர்நாடகத்தில் முன்னாள் முதல் மந்திரியாக இருந்தவர் தேவராஜ் அர்ஸ். கர்நாடகாவை  நிர்வாகம் செய்த முக்கிய முதல்-மந்திரிகளில் இவர் முதன்மையாக கருதப்படுவார். மேலும்  இவர் கடந்த 1972 ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் வரலாறு காணாத வெற்றியை பெற்றதன் காரணமாக கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தது. அவரது வெற்றியை கண்டு மகிழ்ச்சி அடைந்த மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவர்கள்,  வெளிநாட்டிலிருந்து மெர்சிடஸ் பென்ஸ் காரை வாங்கி, அதை அவருக்கு பரிசாக அளித்தார்.

அதன் பின்னர் சுமார் 10 ஆண்டு காலம் வரை கர்நாடக முதல் மந்திரியாக இருந்த தேவராஜ் அர்ஸ், அவருக்கு பரிசாக  இந்திரா காந்தி வழங்கிய அந்த mercedes-benz காரிலேயே வலம் வந்து கொண்டிருந்தார். அந்த காரின் நிறம் முழு கருப்பு ஆகும். மேலும் கருப்பு நிறம் கொண்ட அந்த கார் அவருக்கு மிகவும் பிடித்து இருந்ததாகவும் கூறப்பட்டது. அவர் அந்த காரை தொடர்ந்து பயன்படுத்தி வந்ததால், கர்நாடக மக்கள் அந்த காரை பிளாக் பியூட்டி என்று செல்லமாக அழைப்பார்கள்.

மேலும் முன்னாள் தலைவர் தேவராஜ் அர்ஸ் அந்தக் காரை பயன்படுத்தியதால் அதற்கு மேலும் அதிகமாக மவுசு இருந்தது. பின் அவரின் மறைவுக்குப் பிறகு, அவர் பயன்படுத்திய  அந்தக் கார் ஏலம் விடப்பட்டது. அதை ஜி.எம் பாபு என்பவர் விலைக்கு வாங்கி பாதுகாத்து வந்தார். இந்த நிலையில் நேற்று தேவராஜ் அரஸ்ன் 106வது வயது பிறந்த நாள் விழா பெங்களூரு விதான சவுதாவில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி அவர் பயன்படுத்திய அந்த கார் விதான சவுதாவிற்கு வரவழைக்கப்பட்டது.

நேற்று காலை அந்த கார் அந்த இடத்தின் உள்ளே நுழைந்தபோது அங்கிருந்தவர்கள் பலத்த ஆரவாரம் செய்து, மகிழ்ச்சியுடன் அந்த காரை வரவேற்றனர். மேலும் ஏராளமானோர் அந்த காரை தங்களது செல்போன்களில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். பலர் அந்த காரின் முன்பு நின்று செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர். பின்னர் அந்த கார் அந்த வளாகத்தில் ஒரு வலம் வந்தது. மேலும் அந்த கார் இன்று வரையில் நல்ல நிலையில் இருப்பதாகவும், இதற்கு முன்பு முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா அந்த காரில் ஒரு முறை வலம் வந்து மகிழ்ச்சி அடைந்ததாகவும், அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர். 48 வருடங்கள் கழித்தும் இன்றளவும் அந்த கார் அதே அழகுடன் இருப்பதாக பலரும் கூறினர்.

Previous articleதமிழக அரசின் அடுத்த நல உதவி! இவர்களுக்கெல்லாம் மீண்டும் 14 மளிகை பொருட்கள் ப்ரீ!
Next articleவிவசாயிகளுக்கு அடித்த ஜாக்பாட்! மாதம் ரூ 58 செலுத்தி  ரூ. 3000 பெற்றுக்கொள்ளலாம்!