தமிழக அரசின் அடுத்த நல உதவி! இவர்களுக்கெல்லாம் மீண்டும் 14 மளிகை பொருட்கள் ப்ரீ!

0
134
Tamil Nadu government's next welfare assistance! 14 Groceries Again Free!
Tamil Nadu government's next welfare assistance! 14 Groceries Again Free!

தமிழக அரசின் அடுத்த நல உதவி! இவர்களுக்கெல்லாம் மீண்டும் 14 மளிகை  பொருட்கள் ப்ரீ!

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தனதுகூட்டணி கட்சிகளுடன் பெரும்பான்மையான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது.அதனை தொடர்ந்து மக்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது.திமுக ஆட்சி அமர்த்திய ஒரு மாதத்திற்குள்ளேயே கொரோனாவின் இரண்டாவது அலை தமிழ்நாட்டில் தீவிரமாக பரவத்தொடங்கியது.தமிழக அரசானது அந்த சூழலில் முன்னேற்பாடுகள் ஏதும் செய்து வைக்கவில்லை.அதனால் மக்கள் ஆக்சிஜன் இன்றியும் மருத்துவமனைகள் இன்றியும் பெருமளவு அவதிக்குள்ளாகினர்.

இவற்றைக் கட்டுப்படுத்த முடியாமல் தமிழகத்திற்கு ஒரு மாத காலம் ஊரடங்கு அமல்படுத்தினார். அப்பொழுது பொது மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்காதவாறு அவர்களுக்கு நான்காயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டது.இதனை இரண்டு தவணையாக தமிழக அரசு வழங்கியது.மேலும் 14 மளிகை பொருட்கள் அடங்கிய ஓர் பையும் வழங்கப்பட்டது.இது அனைத்தும் குடும்ப அட்டைதாரர்கள் மட்டுமே பெற்றுக்கொள்ள முடிந்தவாறு இருந்தது.அதுமட்டுமின்றி குடும்ப அட்டைதாரர்கள் இந்த நலத்திட்ட உதவிகளால் பெருமளவு பயனடைந்தனர்.

இதனையடுத்து தற்பொழுது இந்த 14 பொருட்கள் அடங்கிய மளிகை பொருட்களை கொரோனாவால் பாதிப்படைந்தவர்களுக்கு வழங்குமாறு உணவு பொருள் வழங்கல் துணை ஆணையர் தெரிவித்துள்ளார்.மேலும் இவர் தகவல் அறிக்கையில் ,இந்த 14 மளிகை பொருட்களை கொரோனா பாதிப்படைந்தவர்கள்,அதிலிருந்து மீண்டு வந்தவர்கள் மற்றும் குடிசை சேரி பகுதிகளில் வசிப்போர் ,பொருளாதரத்தில் மிகவும் நலிவடைந்தவர் போன்றோருக்கு வழங்குமாறு அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் அறிக்கை விடுத்துள்ளார்.இதன் மூலம் ஒன்றரை லட்சம் பயனாளிகள் பயனடைவார்கள் என்பதையும் கூறியுள்ளார்.

மேலும் இந்த 14 பொருட்களும் தரமாக உள்ளதா என்பதை ஆய்வு செய்த பிறகே பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த 14 பொருட்களை பெறுபவர்கள் இதற்கு முன் இதை வாங்கலாம் அல்லது இந்த 14 பொருட்கள் வாங்குவதற்கு தகுதி தகுதி வாய்ந்தவர்கள் என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.மேலும் இந்த பொருட்களை வாங்குபவர்கள் அவர்களிடமிருந்து கையெழுத்து வாங்கி அறிக்கையாக தாக்கல் செய்ய செப்டம்பர் 10-ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுத்துள்ளார்.