கருப்புக்கொடி ஏந்தி கண்டன போராட்டம்! ஒன்றிய அரசை எதிர்க்கும் திமுக!
திமுக தற்பொழுது சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமர்த்திய நாள் முதல் பல்வேறு நலத் திட்டங்களை மக்களுக்கு செய்து வருகிறது.அந்த வகையில் தமிழகத்தில் தற்போது நல்லாட்சி நடைபெற்று வருகிறது என பலர் ஸ்டாலினை புகழாரம் சூட்டுகின்றனர்.இந்நிலையில் முதன்முறையாக மக்கள் முன்னிலையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.அவற்றிலும் முதன்முறையாக வேளானுக்கு என்று பட்ஜெட் தாக்கல் செய்தனர். நேற்று மக்களுக்கு கொடுத்த 500 அறிக்கைகளும் கூடிய விரைவில் அரசாணையாக மாற்ற வேண்டும் என கூறினார்.அதுமட்டுமின்றி அவர் கூறிய திட்டங்கள் செயல்படுபவை மட்டும் ஆன்லைனிலேயே பார்துகொள்ளும்படி ஓர் டெக்னாலஜியை கொண்டுவருவதாக நேற்று கூறியிருந்தார்.
அதன்படி மக்கள் ஆன்லைனில் தற்போது செயல்பட்டு வரும் நலத்திட்டங்கள் உள்ள பட்டியலை கண்டு அறிந்து கொள்வது எளிதான ஒன்றாக இருக்கும்.மேலும் தற்போது நீட் தேர்வு காரணமாக மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.அதுமட்டுமின்றி நீட் தேர்வு முடிவுகள் வெளிவந்த பிறகு மாணவர்கள் வெற்றி தோல்வியை கண்டு அஞ்சாமல் எந்தவித தற்கொலை முயற்சியும் எடுக்காமல் இருப்பதற்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டும் வருகிறது.இருப்பினும் மாணவர்கள் நீட் தேர்வு முடிவு கண்டு ஏதேனும் விபரீத முடிவுகள் எடுத்து விடுவார்களாக என்பதும் ஓர் பக்கம் மக்களுக்கு அச்சத்தையே கொடுக்கிறது.
தற்பொழுது மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்கள் ,பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு, தனியார்மயமாக்குதல் ,நீட்தேர்வு ,போன்ற விவகாரங்கள் மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை எதிர்த்து போராட்டம் நடத்தப்படும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அவரது அறிக்கையில் வெளியிட்டிருந்தார்.இந்தப் போராட்டமானது தேசிய அளவிலான எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.அந்த வகையில் வரும் 20-ஆம் தேதி காலை 10 மணி அளவில் திமுக நிர்வாகிகள் தங்களின் இல்லம் முன் கருப்புக்கொடி ஏந்தி சக கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என கூறியுள்ளனர்.மேலும் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில் மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்டித்து மதசார்பற்ற ஜனநாயக இந்திய குடியரசை பாதுகாப்போம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.