சேலத்தில் கருப்பு பூஞ்சை? பீதியில் மக்கள்!

Photo of author

By Parthipan K

சேலத்தில் கருப்பு பூஞ்சை? பீதியில் மக்கள்!

Parthipan K

Black fungus in Salem? People in panic!

சேலத்தில் கருப்பு பூஞ்சை? பீதியில் மக்கள்!

சேலம் மாவட்டத்தில் தினம்தோறும்  கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு ஓமலூர் பகுதியை சேர்ந்த 53ஆண் ஒருவருக்கு  கருப்பு பூஞ்சை நோய் அறிகுறியுடன் நேற்று முன்தினம் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வருகின்றனர்.மேலும் அவரிடம் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் முடிவு வந்த பிறகு தான் அவருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு உறுதி செய்யப்படும் எனவும் மருத்துவர்கள் கூறினார்கள். இதனை தொடர்ந்து கருப்பு பூஞ்சை தொற்றுக்கு  மூன்று பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.